உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் எம்.பி.பாட்டீல் வெளிநாடு சுற்றுப்பயணம்

அமைச்சர் எம்.பி.பாட்டீல் வெளிநாடு சுற்றுப்பயணம்

பெங்களூரு : கர்நாடக தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், ஜப்பான், தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர்.கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பத்து நாட்கள் ஜப்பான், தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, பெங்களூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். இவருடன் தொழிற்துறை முதன்மை செயலர் செல்வகுமார், வர்த்தகம், தொழிற்துறை கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உட்பட, பல உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.இரண்டு நாடுகளின் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து, கர்நாடகாவில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுப்பர். மாநிலத்தின் தொழில் நிறுவனங்களுக்கு உள்ள சாதகமான சூழ்நிலை, சிறந்த கொள்கை அமலில் இருப்பதை விவரிப்பர். இங்கு தொழில் துவங்கினால் தேவையான அனைத்து வசதிகளையும், அரசு செய்து தருவதாக உறுதி அளிப்பர்.இரு நாடுகளின், 27க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவர். அமைச்சர் தலைமையிலான குழுவினர், டோக்கியோ மற்றும் சியோல் நகரங்களில், 'ரோடு ஷோ' நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rpalnivelu
ஜூன் 24, 2024 07:55

தென்னகத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா/தெலுங்கானா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிருக்கின்றன. முன்னோடி மாநிலமான தமிழகம் திருட்டு த்ரவிஷன்கள் கைகளில் சிக்கி பின்னோடி சென்று கொண்டிருக்கிறது . அந்த அண்ணாமலை தான் காப்பாற்ற வேண்டும்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி