உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைனர் சிறுவன் கத்தியால் குத்திக்கொலை

மைனர் சிறுவன் கத்தியால் குத்திக்கொலை

ஜஹாங்கிர்புரி: ஜஹாங்கிர்புரி பகுதியின் எச் பிளாக்கில் நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் செல்வதற்குள், சிறுவனை அவனது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதல், தனிப்பட்ட பகை உள்ளிட்ட ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.சிறுவனின் குடும்பத்தினர் அனைவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை