உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காணாமல் போன சிறுவன் கொலை

காணாமல் போன சிறுவன் கொலை

ஹாசன், : காணாமல் போன 12 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. அவன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.ஹாசனின் சிக்க ஹொன்னேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரூபா. தம்பதியின் மகன் குஷால், 12. இவர் நண்பர்களுடன் விளையாடச் செல்வதாக, பெற்றோரிடம் கூறி, நேற்று முன் தினம் மாலை, வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை.இரவாகியும் மகன் வீட்டுக்கு வராததால், பீதியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை. அப்பகுதியில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்ததால், சிறுவனை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றிருக்கலாம் என, சந்தேகித்து கிராமத்தினருடன் சேர்ந்து, வனப்பகுதியில் தேடியும் பயன் இல்லை.ஹாசன் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் தேடி வந்த நிலையில், ஹாசன் புறநகரின் பசவனஹள்ளி அருகில், புதரில் சிறுவனின் உடல் நேற்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை கொலை செய்து, சடலத்தை புதரில் வீசியது தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக, கொலை நடந்துள்ளதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து ஹாசன் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ