உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.ஏ., ஆபாச வீடியோ ம.ஜ.த.,வினர் இருவர் கைது 

எம்.எல்.ஏ., ஆபாச வீடியோ ம.ஜ.த.,வினர் இருவர் கைது 

ராம்நகர், - ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹூசைன் ஆபாச வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்ட வழக்கில், ம.ஜ.த., தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.ஹாசன் எம்.பி., பிரஜ்வலின் ஆபாச வீடியோ வெளியானதில், காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக, ம.ஜ.த., குற்றம் சாட்டி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, துணை முதல்வர் சிவகுமார் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும், புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் ராம்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹூசைன், கட்சியின் பெண் தொண்டர் ஒருவருடன், 'வாட்ஸாப்' வீடியோ காலில் ஆபாசமாக பேசுவது போன்று, புகைப்படம், வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.இதுகுறித்து அந்த பெண் தொண்டர், ராம்நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக, ராம்நகரின் ஹரோஹள்ளி கனலுதொட்டி கிராமத்தின், ம.ஜ.த., தொண்டர்கள் சேஷாத்ரி, சசிகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை