உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியும், தேவகவுடாவும் வளர்ச்சிக்கு பாடுபடுவர்

மோடியும், தேவகவுடாவும் வளர்ச்சிக்கு பாடுபடுவர்

பெங்களூரு : “பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இணைந்து, மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவர். பாலும், தேனும் போன்று பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பணியாற்றுகின்றனர்,” என, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பிரதமர் மோடியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் இணைந்து, கர்நாடக மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவர். பாலும், தேனும் போன்று பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பணியாற்றுகின்றனர்.தேவகவுடா பிரதமராக இருந்தபோது, லோக்சபாவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்தார். இன்று மோடி அந்த மசோதாவை நடைமுறைபடுத்தி உள்ளார்.இத்தகையோர் மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லது. இருவரின் வழிகாட்டுதல்படி நாங்கள் பணியாற்றுவோம்.பிரதமர் மோடி உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர். அவரின் தலைமையின் கீழ், நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது. அத்துடன் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக உள்ளது. உலகளவில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைத்துள்ளது.நாடு முழுதும் 400 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அதில் நானும் ஒரு எம்.பி.,யாக இருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ