உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மோடி பாராட்டு

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மோடி பாராட்டு

புதுடில்லி: உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கி கவர்னராக 2 -வது முறையாக தேர்வு பெற்ற சக்திகாந்த தாஸிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.உலகளவில் சிறந்த ரிசர்வ் வங்கி கவர்னருக்கான ரேட்டிங்கில் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் ‛ ஏ பிளஸ் 'ரேங்கிங் பெற்றுள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் கூறியது, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஸ்ரீ சக்திகாந்தா தாஸிற்கு வாழ்த்துகள், இரண்டாவது முறையாக தேர்வு பெற்றது அவரது தலைமையின் கீழ் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகும் .இவ்வாறு மோடி பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஆக 22, 2024 05:50

இந்திய நிதி நிலை மேம்பட காரணமானவர் நிர்மலா சீதாராமன். அவருக்கும் அவரது அயராத உழைப்புக்கும் முதலில் பாராட்டு. அதன் பின்னர்தான் ரிசர்வ் வாங்கி கவர்னருக்கு பாராட்டு.


தமிழன்
ஆக 21, 2024 23:58

100 ரூபாய் மதிப்புள்ள அரசு பணத்தை, 10000 என அதிக விலைக்கு விற்க முயன்றதால் இந்த கருணாநிதி உருவம் பொரித்த 100 ரூபாய் நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிக்குமா?


சிவம்
ஆக 21, 2024 23:35

சக்திகந்ததாஸ் IAS, தமிழ் நாடு cadre என்பது தமிழகத்திற்கும் பெருமை.


தமிழன்
ஆக 21, 2024 22:46

100 ரூபாய் மதிப்புள்ள அரசு பணத்தை, 10000 என அதிக விலைக்கு விற்க முயன்ற முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா. ?


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:47

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ