உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோகன் பகவத், யோகி ஆதித்யநாத் இன்று ஆலோசனை

மோகன் பகவத், யோகி ஆதித்யநாத் இன்று ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோராக்பூர்: உபி. பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இன்று முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பிரதமராக மோடி கடந்த 09-ம் தேதி பதவியேற்ற பின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முதன்முறையாக கடந்த 10-ம் தேதி பொது நிகழ்ச்சியில் பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு யாருடையது? அரசு இந்த பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் என பேசினார்.இந்நிலையில் உ.பி.யில் ஆர்.எஸ். எஸ்., பயிற்சி முகாமையொட்டி கோராக்பூரில் பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உபி., யில் பா.ஜ., பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., தோல்வியடைந்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது.இன்று நடக்கும் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
ஜூன் 15, 2024 09:04

பலர் தாமரை படுத்துவிட்டது என மீடியாக்கள் மு ளம் கத்துகிறார்கள். அவர்களுக்கு தென் தமிழகத்தில் வசித்துவரும் முத்த குடிமகனின் தனிப்பட்ட கருத்து நாட்டு நாலணா ???? நமது நாலணா ??? ஒரு இலை நாட்டு பாதுகாப்பிற்கும், ராமர் கோவில் வழிபாட்டிற்கும் , காசி விசுவநாதர் கோயில் வழிபாட்டிற்கும், நமது எதிரிகளை திருப்பி கொடூரமாக அடிக்கும் விதத்திலும் தாமரை மிக சரியாக செயல்கள் புரிந்துள்ளது.. ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் பாதிப்பு அடைந்திருக்கலாம் ஆனால் தேசிய வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் இது சரிதான். ரோடுகள் போடும்போது அண்டை நிலம் அரசு எடுக்கத்தான்வேண்டும் ரோடுகள் விறுவிப்படுத்த இடம் வேண்டும். ஆனால் பாதிப்புஅடைந்தவர் இதை தாமரைக்கு எதிராக திருப்ப்பினர். பஞ்சாபி, ஹரியானா, உத்திரக்கண்டு ,அருணாச்சலபிரேதேசம் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் நமது எதிரிகள் அச்சுறுத்தல் என்றும் உண்டு. அங்கு வசிப்பவர்கள் ஓலா அனைவரும் நாட்டுநலனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தியனின் கெளரவம் எவ்வாறு உயர்ந்தது என அனைவருக்கும் தெரியும். ஆன்னானப்பட்ட அப்துல் காலம் அவர்களுக்கு விசா கொடுக்காமல் திருப்பி அனுப்பிய நாடு இன்று இந்தியர்களில் காலில் விழுந்துகிடக்கிறது


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 07:44

சென்ற 2014 & 2019 தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக ஆர் எஸ் எஸ் அமைப்பு களமிறங்கி அடிமட்டத்தில் உள்ள அனைவரின் வீடுகளுக்கும் சென்று ஒட்டுக்கேட்டு வந்திருப்பதாக தகவல். 2024ல் பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் களமிறங்கவில்லை. அதனால் உபி படுத்து விட்டது. இதன் லாபம் அகிலேஷ் கட்சிக்கு சென்று விட்டது. ஆகவே இனி அனைவருக்கும் சிக்கல்தான்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி