மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
புதுடில்லி:'டில்லிக்கு இந்த வார இறுதிக்குள் பருவமழை வரலாம். நிலவும் புழுக்கமான சூழ்நிலையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்' என, தனியார் வானிலை நிறுவனம் நேற்று கணித்துள்ளது.தேசிய தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் புதன்கிழமை 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட இரண்டு டிகிரி அதிகம்.இந்நிலையில், தனியார் நிறுவனமான ஸ்கைமெட் வெதர் சர்வீசஸின் மகேஷ் பலாவத் நேற்று கூறுகையில், “பருவமழை ஜூன் 29 அல்லது 30ம் தேதி டில்லியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஜூன் 27 முதல் 29க்குள் டில்லியில் பருவமழை நுழையும். கடந்த ஆண்டு, இது ஜூன் 26ல் வந்தது. 2022ல் ஜூன் 30 அன்று பதிவு செய்யப்பட்டது,” என்றார்.எனினும், பருவமழை எப்போது தேசிய தலைநகருக்குள் நுழையும் என்பது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம், எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago