உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛முடா ஊழல் விவகாரம்: 18 அதிகாரிகளுக்கு லோக்ஆயுக்தா நோட்டீஸ்

‛‛முடா ஊழல் விவகாரம்: 18 அதிகாரிகளுக்கு லோக்ஆயுக்தா நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் முடா ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய 18 அதிகாரிகளுக்கு லோக்ஆயுக்தா கோர்ட் நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் மைசூரில் முடா என்றழைக்கப்படும் நகர வளர்ச்சி ஆணையம், மாற்று நிலம் ஒதுக்குவதில் நடைபெற்ற மெகா ஊழல் விவகாரம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.இந்த விவகாரத்தில் கர்நாடகா காங்., முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில், ரூ. 3,800 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த கர்நாடகா அரசு குழு அமைத்துள்ளது. முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் முடா ஊழல் விவகாரத்தில் 350க்கும் மேற்பட்டோருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதும், இதில் 18 க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து 18 அதிகாரிகளுக்கு கர்நாடகா லோக்ஆயுக்தா கோர்ட் சம்மன் அனுப்பி வரும் 12-ம் தேதியன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை