உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லிமென்ட் சுவர் ஏறி குதிக்க முயன்ற மர்ம நபர் கைது

பார்லிமென்ட் சுவர் ஏறி குதிக்க முயன்ற மர்ம நபர் கைது

புதுடில்லி: பார்லிமெண்ட் வளாகத்திற்குள் சுவர் ஏறி குதிக்க முயன்ற மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.நேற்று மதியம் 2:45 மணியளவில் பாராளுமன்ற இணைப்பு கட்டடத்தின் பல அடி உயரமுள்ள சுவர் மீது அரைக்கால் டவுசர், டீ சர்ட் அணிந்த மர்மநபர் சுவர் ஏறி குதிக்க முயன்றான். அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி மூலம் கண்டறிந்த சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் அந்த மர்ம நபரை பிடித்தனர் .அவனிடம் ஆயுதங்கள் எதுமில்லை. உடனடியாக டில்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் மணீஷ் என்பதும் உத்திரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. கடந்தாண்டு டிச. 13-ம் தேதி பார்லிமென்டிற்குள் சிலர் நுழைந்து வண்ணப்புகை வீச்சு சம்பவத்தால் பாதுகாப்பு குறைபாடு என எதிர்கட்சிகள் விமர்சித்தனர். நேற்று நடந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anand
ஆக 17, 2024 10:43

நல்லா விசாரியுங்கள், இது புள்ளிராஜாக்களின் வேலையாக கூட இருக்கலாம்.


Kasimani Baskaran
ஆக 17, 2024 10:26

சுட்டுப்பிடித்திருந்தால் அடுத்து சுவரேறுபவர்கள் பயப்படுவார்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:23

ஊரு அலிகர் என்றால் மணீஷ் ஆக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லையே தல ????


chennai sivakumar
ஆக 17, 2024 05:13

Shoot and பினிஷ். அது இல்லாதவரை இவை நடந்து கொண்டு இருக்கும்


RAJ
ஆக 17, 2024 03:21

மாங்க திருட போய் இருப்பானோ ??


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை