உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்டு மோடியை சந்தித்த நாயுடு

மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்டு மோடியை சந்தித்த நாயுடு

புதுடில்லி: மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி கோரி ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திர பாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.டில்லி சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி விரைந்து ஒதுக்கிடுமாறு வலியுறுத்தினார். பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். சந்திரபாபு நாயுடு உடன் தெலுங்கு தேச மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kulandai kannan
ஆக 18, 2024 11:12

நிதியே இல்லாதபோது ஏனய்யா அண்ணா கேண்டீன்?


திலீப்
ஆக 18, 2024 08:37

பேசும் தி.மு.க வுக்கு பாதி எமவுண்ட் குடுத்தால் 40 பேர் சப்போர்ட் கிடைக்கும். ஆனா, கணக்கு கேக்கக் கூடாது.


அரசு
ஆக 18, 2024 07:51

வேலியில் போகும் ஓணானை மடியில் பிடித்து வைத்துக் கொண்டு, குடையுதே குடையுதே என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவித்துத் தான் தீர வேண்டும்.


மோகனசுந்தரம்
ஆக 18, 2024 06:07

இனி இவன் குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பான். மோடி அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்