உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிழைத்த குழந்தை பெயர் மாற்றம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிழைத்த குழந்தை பெயர் மாற்றம்

விஜயபுரா, : ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு பெயர் மாற்றப்பட்டு உள்ளது.விஜயபுரா, இண்டி லச்சியானா கிராமத்தில் வசிப்பவர் சதீஷ், 28. இவரது மனைவி பூஜா, 26. இவர்களின் 2 வயது மகன் சாத்விக். கடந்த 4ம் தேதி மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த சாத்விக், திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், உயிருடன் மீட்கப்பட்டார்.மகன் உயிருடன் திரும்ப கிடைத்தால், உனது பெயரை வைக்கிறேன் என்று, சித்தலிங்க மஹாராஜா சுவாமியிடம், பெற்றோர் வேண்டி கொண்டனர்.சாத்விக் உயிருடன் கிடைத்ததால், அவரது பெயரை சித்தலிங்கா என்று மாற்ற பெற்றோர் முடிவு செய்தனர். விஜயபுராவின் கோல்ஹாராவில் உள்ள திகம்பரேஸ்வர் மடத்திற்கு நேற்று சென்றனர். மடாதிபதி கல்லிநாத் சுவாமி தலைமையில், சாத்விக் பெயர், சித்தலிங்கா என்று மாற்றப்பட்டது. பின்னர், மடத்தில் உள்ள தொட்டிலில், சித்தலிங்காவை போட்டு பெற்றோர் தாலாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை