உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் வினாத்தாள் லீக்: 3 டாக்டர்கள் கைது

நீட் வினாத்தாள் லீக்: 3 டாக்டர்கள் கைது

பாட்னா: நீட் வினாத்தாள் லீக் ஆன விவகாரம் தொடர்பாக இன்று 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை இன்று (ஜூலை 18) நடக்கவுள்ளது. ஏற்கனவே சிபிஐ விசாரணையில் பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பீகார் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 3 பேரை கைது செய்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2024 15:05

அந்த டாக்டர்களின் பெயரையும் படத்தையும் வெளியிடுவதில் தவறு ஏதேனும் உள்ளதா?


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 13:52

இங்கும் பல பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் MASS COPYING முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் உண்டு. ஒரு முறையாவது மறு தேர்வு நடந்ததுண்டா?


கனோஜ் ஆங்ரே
ஜூலை 21, 2024 18:18

செய்திக்கும்... நீங்க சொன்ன பதிலும் ஏதேனும் தொடர்பு உண்டா....? பீகாரில் நீட் வினாத்தாள் லீக்..ஆனதில் 3 டாக்டர் கைது...ன்னு சொன்ன உடனே... இந்திக்காரங்களுக்கு சப்போர்ட் பண்றியே... 10வது 12வது வகுப்பு தேர்வும் இதுவும் ஒண்ணா... அது சரி... பீகார், உ.பி., ம.பி.., 10வது 12வது பொதுத்தேர்வில் தாய்மொழியான இந்தியில் 40 லட்சம் மாணவர்கள் பெயிலாமே... வெட்கமா இல்ல...?


Srinivasan v
ஜூலை 18, 2024 11:18

ரீ நீட் என்பது அடம்ட்டு 24 லட்சம் மாணவர்களுக்கு ஓராயிரம் மாணவர்களின் குறை எல்லோரையும் தண்டிப்பது நியாயமில்லை. மீண்டும் இது நடக்காது என உத்தரவாதமில்லை.இது சுயநலமிகளால உருவாக்கப்பட்டு மாணவர்களை அழிக்கவல்லது. நீட் மாநிலம் நடத்தினால் லஞ்சம் லாவண்யம் தலைவிரித்தாடும் .


K.Muthuraj
ஜூலை 18, 2024 10:59

ஏனப்பா.... இங்கே பிளஸ் 2 தேர்வு மதிப்பீடுகள் சரியாக உள்ளனவா என்ன? அங்கேயே ஊழல் தானே உள்ளது. அப்படியெனில், வேண்டியவனுக்கு மருத்துவ சேர்க்கை தகுதி மதிப்பெண் பிளஸ் 2 தேர்விலேயே எளிதாக கொடுக்கமுடியும் தானே. TNPSC மதிப்பீடுகளே தெளிவில்லை. இதுலே அடுத்தவனை குறை வேறு.


GoK
ஜூலை 18, 2024 10:25

முதலில் உண்மையை ஒப்புக்கொண்டால் தெளிவு பிறக்கும் வழியும் பிறக்கும் ...இந்தியர்கள் ஊழலைப் பெரிய தவறாக நினைப்பதில்லை ..லஞ்சம், சிபாரிசு, குடும்பம் சார்ந்த முடிவுகள், முதல் பதில் எதற்குமே பொய்யில் தொடங்குவது....தொட்டிலில் தொடங்கி இடுகாடு வரை இது தொடர்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பொய்யய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். என்று உண்மையாகவே சட்டத்தின் முன் அனைவரும் சமமாகின்றோமோ ஆண்ட்ரே இந்த நிலை, குறை தீரும்


Apposthalan samlin
ஜூலை 18, 2024 10:14

இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளன மத்திய அரசு நடத்தும் அதனை தேர்வுகளும் முறை கேடுகள் தான் அரசியல் வாதிகள் பணம் படைத்தவர்கள் முறை கேடுகள் செய்கிறார்கள் இந்த பிஜேபி அரசு எல்லா முறைகேடுகளுக்கு துணை போகிறது .


R K Raman
ஜூலை 18, 2024 13:40

இன்னும் வயிற்றெரிச்சல் போகவில்லை


S Regurathi Pandian
ஜூலை 18, 2024 10:04

மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆனால் முற்றாக மறைத்து விடுவார்கள்.


Nagercoil Suresh
ஜூலை 18, 2024 10:03

அணையை கடந்த வெள்ளம் அணைக்கு திரும்பி வருவதே கிடையாது அதே போல நீட் வினாத்தாள் லீக் ஆனதை ஒன்னும் செய்ய முடியாது யாரை கைது செய்தாலும் பயனில்லை, வரும் காலங்களில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது கம்ப்யூட்டர் மூலமாகவோ கேள்விகளை கடைசி நேரத்தில் தேர்ந்தெடுத்து அதை ப்ரிண்ட் அவுட் எடுத்து மாணவர்களுக்கு கொடுக்கலாம் எதுவாக இருந்தாலும் டெல்லி ஏதாவது ஒரு முடிவு கூடிய சீக்கிரம் எடுக்க வேண்டும். நடந்த தேர்வை திருப்பி நடத்தினாலும் தவறில்லை. அடுத்த முக்கிய தேவை இந்தியாவிலுள்ள மருத்துவமனையிலிருந்து டேட்டாக்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள் அவர்கள் அதை ஏ ஐ மூலம் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் இதனால் வரும் தலைமுறைகளில் வேறு நாட்டிற்கு அடிமை ஆக வேண்டிய நிலையாக மாறும், மருத்துவத்திலும் நாட்டாமை சொல்லுவதை கேட்க வேண்டிய நிலை உருவாகலாம், இதை தவிர்க்க இப்போதே சுதாரித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம்.


ديفيد رافائيل
ஜூலை 18, 2024 09:33

Doctor க்கு monthly 75000 rupees salary னு கேள்விப்பட்டேன். இந்த salary வாங்கியும் கூட பேராசை பணத்திற்காக.


R K Raman
ஜூலை 18, 2024 13:42

நீட் வரும் முன் கோடி கொடுத்து டாக்டர் ஆனானோ என்னவே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி