மேலும் செய்திகள்
தவறுக்கு துணை போனது கிடையாது : சொல்கிறார் அஜித் பவார்
39 minutes ago
பெங்களூரு: தொட்ட குப்பி அருகில், மளிகை பொருள் கிடங்கில் நடந்த தீ விபத்தை தொடர்ந்து, ஒரு வாரமாகியும் இன்னும் புகைந்து கொண்டிருப்பதால், அப்பகுதியினர் பீதியில் உள்ளனர்.பெங்களூரின், தொட்ட குப்பி அருகில் கிடங்கு உள்ளது. இங்கு மளிகை பொருட்கள் உட்பட, பல்வேறு பொருட்கள் சேமித்து வைத்திருந்தனர். கடந்த வாரம் கிடங்கில் தீ பிடித்தது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின.தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் தீ முற்றிலும் அணையவில்லை. தீப்பொறிகள் ஆங்காங்கு தென்படுகிறது. இரவு, பகல் பாராமல் கிடங்கில் இருந்து கரும்புகை வெளியே வந்து கொண்டே இருக்கிறது. தீ அக்கம், பக்கத்து கட்டடங்கள், வீடுகளுக்கு பரவுமோ என, அஞ்சுகின்றனர்.சம்பவ நாளன்று அங்கு வந்த தீயணைப்பு படையினர், தண்ணீர் பற்றாக்குறையால், தீயை சரியாக அணைக்காமல் சென்று விட்டனர் என, கூறப்படுகிறது. கிடங்கில் உள்ள பொருட்களில் தீ பிடித்து, பரவி வருகிறது. தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு வந்து, முழுதுமாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அசம்பாவிதம் ஏற்படும் என, அப்பகுதியினர் அறிவுறுத்துகின்றனர்.
39 minutes ago