மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
58 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
1 hour(s) ago
வர்த்துார்: கேரளாவை சேர்ந்தவர் அகில் சாபு, 30. ஐ.டி., ஊழியர். பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, 3 வயது மகளுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை மனைவி, மகளுடன் அகில் சாபு காரில் சென்றார். வர்த்துார் பகுதியில் சென்ற போது, காரின் பின்னால் பைக்கில் வந்தவர் முந்தி செல்ல வழிகேட்டு, 'ஹாரன்' அடித்து கொண்டே வந்தார். ஆனால் அகில் சாபு வழிவிடவில்லை என்று தெரிகிறது.இதனால், பைக் ஓட்டி வந்தவர் கடுப்பானார். ஒரு கட்டத்தில் காரை முந்தி சென்று, காருக்கு முன்பு, பைக்கை நிறுத்தினார். இறங்கி சென்று அகில் சாபுவிடம் தகராறு செய்தார். தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை எடுத்து, கார் கண்ணாடியில் அடித்தார். இதனால் கண்ணாடி சுக்குநுாறாக நொறுங்கியது.கண்ணாடி துகள்கள் சிதறியதில், அபுல் சாபுவின் 3 வயது மகளுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பைக்கில் வந்தவர் அங்கிருந்து தப்பினார். அகில் சாபு அளித்த புகாரில் வர்த்துார் போலீசார் விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, பைக்கை ஓட்டியவர் வர்த்துாரின் ஜெகதீஷ் என்று தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
58 minutes ago
1 hour(s) ago