உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ந்த இந்தியாவை உருவாக்க புதிய கல்விக் கொள்கை: அமித்ஷா பேச்சு

வளர்ந்த இந்தியாவை உருவாக்க புதிய கல்விக் கொள்கை: அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: 'வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப மோடி அரசு, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் அமித்ஷா பேசியதாவது: நான் இன்று இந்தூருக்கு வந்திருக்கிறேன். இந்தூர் அதன் தூய்மை, சுவை மற்றும் நல்ல நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. இன்று முதல் இந்தூர் பசுமை நகரம் என்று அழைக்கப்படும். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, நமது இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவு.

புதிய கல்விக் கொள்கை

வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப மோடி அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்களை நமது பண்டைய கலாசாரத்துடன் இணைக்கும். புதிய கல்விக் கொள்கை நாட்டிலேயே முதன்முறையாக மத்தியப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான நடவடிக்கைக்காக, மத்தியப் பிரதேச அரசை நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த மாநிலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான பாடத்திட்டம் ஹிந்தியில் அமல்படுத்தப்பட்டது.

பொருளாதார தலைநகரம்

மும்பையை நாட்டின் பொருளாதார தலைநகரம் என்று அழைக்கிறோம். அதே போல் இந்தூர் மத்திய பிரதேசத்தின் பொருளாதார தலைநகரம். கல்வி மையமாக இந்தூர் வேகமாக முன்னேறி வருவது மகிழ்ச்சியான விஷயம். மத்தியப் பிரதேச மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

சாமி தரிசனம்

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹனுமான் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் ம.பி.,முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூலை 14, 2024 22:38

அமித்ஷாவுக்கும் கல்விக்கும் ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாதே!


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2024 17:22

உடனே திருட்டு திராவிடம் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு உடனே எதிர்ப்பு காண்பிக்கும் உடனே


Raj
ஜூலை 14, 2024 23:08

யாரும் எதுவும் எழுதும் முன்பே என்ன ஒரு பதற்றம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை