உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் புதிய எரிசக்தி திட்டம்; மத்திய அரசை கண்டித்து போராட்டம்

எல்லையில் புதிய எரிசக்தி திட்டம்; மத்திய அரசை கண்டித்து போராட்டம்

புதுடில்லி : 'இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' எனக்கூறி, லோக்சபாவில் இருந்து காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அத்துடன், பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லோக்சபாவில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி துணை கேள்வி எழுப்பினார்.

அவர் பேசியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், சர்வதேச எல்லையில் இருந்து 1 கி.மீ., தொலைவில் உள்ள குஜராத் மாநிலம் கவடாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச எல்லையில் இருந்து குறைந்தபட்சம் 10 கி.மீ., தொலைவுக்கு அப்பால் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு மட்டும் விதிகளில் மத்திய அரசு ஏதேனும் தளர்வு அளித்துள்ளதா?இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பதிலளித்து பேசுகையில், ''நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ''எனவே, அதற்குரிய உரிமங்கள், ஒப்புதல் வழங்கும் முன், சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களின் அனுமதி முறையாக பெறப்பட்டுள்ளன,'' என்றார்.அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின், பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vivek
மார் 13, 2025 11:45

ஒன்னும் பிரச்சினை இல்லை.. பக்கத்துல ஒரு டாஸ்மாக் போடுங்க.. எங்களுக்கு ஓகே


Ganapathy
மார் 13, 2025 11:39

நாங்கதான் எல்லையில் ரோடு போடக்கூட தகிரியமில்லாம அதையும் ஏதோ ராஜதந்திரம் போல வெட்கமில்லாம பார்லி. சொல்லி பெருமைப்பட்டோமே.. இப்ப இதப்பாத்தா வவுத்தெரிச்சலா இருக்கே


ஆரூர் ரங்
மார் 13, 2025 10:46

முந்தைய அரசுகள் எடுக்கத் துணியாத ரிஸ்க்கை அடானி எடுத்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராட்ட தான் தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தானிலும் உள்நாட்டு கலவரங்கள் நடப்பதால் அவர்கள் குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை.


Dharmavaan
மார் 13, 2025 09:12

காந்தி நேரு காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் ஏஜென்ட் /இந்தியா எதிரி


Rajasekar Jayaraman
மார் 13, 2025 08:40

மத்திய அரசின் அருமையான முடிவு தாக்கும் எதிரிக்கும் பாதிப்பு வரும் ஆகவே தாக்குதல் நடக்க வாய்பு இல்லை.


Gopal
மார் 13, 2025 07:36

திமுகவும் காங்கிரஸ்ஸியும் அடியோடு விரட்ட வேண்டும்.


SRIDHAAR.R
மார் 13, 2025 07:14

காங்கிரஸ், நாட்டிற்கு நலம் பெறும் திட்டங்களுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது.இதனை விசாரிக்கவேண்டூம்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 13, 2025 07:03

திராவிடமும் காங்கிரஸும் தீய சக்திகள். அடியோடு அழிக்கப்பட வேண்டும்


Iyer
மார் 13, 2025 05:29

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் SOLAR PLANT ஆ ? நமது எல்லைக்குள் தானே அமைக்கிறார்கள்? இதற்க்கு காங்கிரஸ் ஏன் பயப்படுகிறது? இப்போது நடப்பது மோதி அரசு? தேசதுரோகி மன்மோகன் அரசு இல்லை - என்பது மனிஷ் திவாரிக்கு புரியனும்.


Kasimani Baskaran
மார் 13, 2025 03:58

மகா கேவலமான நிலைப்பாடு.


புதிய வீடியோ