உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மால்களுக்கு புதிய விதிமுறை; பெங்., மாநகராட்சி அறிவிப்பு

மால்களுக்கு புதிய விதிமுறை; பெங்., மாநகராட்சி அறிவிப்பு

பெங்களூரு : 'பெங்களூரில் உள்ள மால்களுக்கு வருவோரிடம் மொழி, ஜாதி, இனம், சமுதாயம், ஆடை, பிறப்பிடம் அறிந்து பாரபட்சம் பார்க்கக் கூடாது' என, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்கீரப்பா, 70, பெங்களூரில் வேலை செய்யும் தன் மகனை பார்க்க கடந்த மாதம் வந்திருந்தார். மகனுடன் மாகடி சாலையில் உள்ள ஜி.டி., மாலில் படம் பார்க்கச் சென்றார்.பக்கீரப்பா வேஷ்டி, தலைப்பாகை அணிந்து இருந்ததால், மால் பாதுகாவலர், அவரை உள்ளே விடாமல் தடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. பல்வேறு கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் மால் முன் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாலை ஒரு வாரம் மூட அரசு உத்தரவிட்டது. இதன்படி மாலை பூட்டி பெங்களூரு மாநகராட்சியும் சீல் வைத்தது.இந்நிலையில், அனைத்து மால்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: பெங்களூரில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள், மொழி, ஜாதி, இனம், சமுதாயம், ஆடை, பிறப்பிடம் அறிந்து பாரபட்சம் பார்க்கக் கூடாது பொதுமக்கள் அணிந்திருக்கும் உடையின் அடிப்படையில் நுழைவதை தடுக்கக் கூடாது இது தொடர்பாக வணிக வளாகங்கள், அதன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெளிவான அறிவிப்பு மற்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆடையின் அடிப்படையில் மாலுக்குள் யாரையும் தடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி நிர்ணயித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், அது குற்றமாக கருதப்படும்.அத்தகைய வணிக வளாகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். வணிக வளாகங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ