உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் நீதிபதிகள் தேர்வு ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை

ஒடிசாவில் நீதிபதிகள் தேர்வு ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை

கட்டாக் :ஒடிசா மாநிலத்தில், 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வுகளில், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.ஒடிசா மாநிலத்தில் உள்ள, 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய, அந்த மாநில உயர் நீதிமன்றம், இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், ஒரு அறிவிப்பின் படி, பார் கவுன்சிலில் இருந்து நேரடி நியமனம் வாயிலாக, 31 பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன.இன்னொரு முறையான, நேரடி போட்டி தேர்வுகள் வாயிலாக, 14 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன. தேர்வு முடிவுகளை, கட்டாக் நகரில் உள்ள ஒடிசா உயர் நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டது.அதில், இரண்டு விதமாக நடத்தப்பட்ட போட்டிகளில், 366 பேர் பங்கேற்றும், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பார் கவுன்சில்களில் இருந்து தேர்வு செய்யப்பட இருந்த போட்டியாளர்களுக்கு, மூன்று கேள்வி தாள்கள் இருந்தன; 283 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் தலா, 45 மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்பது உட்பட, மூன்று நிபந்தனைகள் இருந்தன. ஆனால், அந்த தேர்விலும், யாரும் வெற்றி பெறவில்லை.அதுபோல, 14 பணியிடங்களை நிரப்ப, 83 நேரடி எழுத்து தேர்வு போட்டியாளர்கள் பங்கேற்றனர். தலா, 75 மதிப்பெண் கொண்ட இரண்டு தாள்களிலும், குறைந்தபட்சம், 45 சதவீத மதிப்பெண்களை கூட யாரும் பெறவில்லை.இதையடுத்து, மாதம் 1.44 லட்சம் முதல் 1.94 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் அந்த பதவிகளுக்கு, இரண்டாவது முறையாக போட்டிகளை நடத்துவதா அல்லது வெற்றி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்ச்சி சதவீத அளவை குறைப்பதா என, அந்த மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
பிப் 25, 2025 10:19

நாடு நாசமாயிட்டு இருக்கு ..... இதுக்கு நாமும் காரணம் .......


Karthik
பிப் 25, 2025 10:15

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்.. யாருமே படிச்சி மெரிட் ல பாஸ் ஆனவங்க இல்ல.. எல்லாருமே அறிவு மற்றும் திறமையே இல்லாம கோட்டாவுல பாஸ் ஆன கேஸுங்க னு. இது போன்றவர்களிடம் கேஸ் விசாரணைக்கு வந்தால் பிறகு தீர்ப்பு எப்படி இருக்கும்??? நம் தலையெழுத்து அவ்வளவுதான்.


chennai sivakumar
பிப் 25, 2025 08:06

எந்த எந்த பாடத்தில் தோல்வியுற்றது என்பதை தெளிவு படுத்தினால் வருங்கால நீதிபதிகளின் பொது அறிவு, ஆங்கில அறிவு எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரியும். நம் நாட்டின் நீதி தரத்தை உலகமே வியந்து?? பார்க்கும்


Dharmavaan
பிப் 25, 2025 07:49

கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும்


Dharmavaan
பிப் 25, 2025 07:47

இப்போது நீதிபதியாய் இருப்பவர்களுக்கும் ,உச்ச நீதி வரை , இந்த தேர்வு வைக்க வேண்டும் மேலும் அவர்கள் நேர்மை ,பாரபட்சமின்மை தேசாபிமானம் போன்றவற்றுக்கும் தேர்வு வேண்டும் இவையெல்லாம் நீதி கொடுத்தால் ப்படி இருக்கும்


B MAADHAVAN
பிப் 25, 2025 06:05

திறமை உள்ளவர்களை நன்கு படிக்க ஊக்கப படுத்த வேண்டும். திறமை உள்ளவர்களுக்கு தகுதியான வேலை கொடுக்க வேண்டும் என்பதை திறமையற்றவர்களும் புரிந்து கொண்டால் சரி.


நரேந்திர பாரதி
பிப் 25, 2025 04:15

இது என்ன பிரமாதம்? இங்கே திருட்டு திராவிடிய நாட்டில் ஆல் பாஸ்


seshadri
பிப் 25, 2025 00:41

இட ஒதுக்கீட்டினால் வந்த விளைவு. தகுதி இல்லாதவர்கள் வக்கீல்கள் ஆனால் எப்படி தகுதியான நீதிபதிகள் கிடைப்பார்கள். எப்படி சரியான நீதி / தீர்ப்பு கிடைக்கும்?


Laddoo
பிப் 25, 2025 02:23

அதான் இருக்கவே இருக்குதே அத்துப் போன கொலிஜியம். அத வச்சி அர குறையெல்லாம் நீதிபதி ஆகி நீதி கொடுக்க வேண்டியது தான் பாக்கி.


கல்யாணராமன்
பிப் 24, 2025 23:31

இப்போது பணியில் இருக்கும் அனைத்து நீதிபதிகளும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நீதிபதி ஆனார்களா அல்லது சீனியாரிட்டி படி நீதிபதி ஆனார்களா? தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு தேர்வு வைத்து தேர்ச்சி பெற பணிக்கு வேண்டும். தோல்வியை தழுபவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை அரசிடம் விட்டு விடலாம்.


Iniyan
பிப் 24, 2025 23:17

நீதி பதிகளின் லட்சணம் இதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை