உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருடத்திற்கு ஒரு பிரதமரல்ல; நான்கு பிரதமர்களை தேர்ந்தெடுப்போம்: சஞ்சய் ராவத்

வருடத்திற்கு ஒரு பிரதமரல்ல; நான்கு பிரதமர்களை தேர்ந்தெடுப்போம்: சஞ்சய் ராவத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 2 அல்லது 4 பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறினார்.இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணியின் போது பிரதமர் மோடி கூறி இருந்தார். பிரதமரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள சிவசேனாவின் சஞ்சய்ராவத் பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது நான்கு பிரதமர்களை கூட உருவாக்குவார்கள் ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி செல்ல விடமாட்டோம் என்றார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது. யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.தற்போது முடிந்துள்ள இரண்டு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது. ஜூன் 4 -ம் தேதி அன்று இண்டியா கூட்டணி 300 இடங்களை தாண்டி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Sivasankaran Kannan
மே 01, 2024 23:31

இந்த கரப்பான் பூச்சிகள் இம்சை தாங்க முடியல


Muthukrishnan.c
மே 01, 2024 18:07

ஏன்


Bhakt
மே 01, 2024 14:25

உதவி தாக்கரேயை காலி பண்ணியாச்சு அடுத்து இந்தி கூட்டணி தலைவர்களயா? இந்த ஆளையும் ஒரு ராஜ தந்திரியா நினைச்சு பேச்ச கேட்டு நாசமா போன உதவாக்கரை


Marudhu
மே 01, 2024 07:12

மக்கள் கோமாளிகள் என்று நினைத்து கொண்டிருக்கும் சஞ்சய் ராவத் போன்ற ஊழல் பெருச்சாளிகள் ஒழிக்கப்படவேண்டும்


Dharmavaan
ஏப் 30, 2024 20:04

இவர்தான் உத்தவ் தாக்கரேயின் சகுனி அவர அழிக்காமல் விடமாட்டார் பிஜேபிசிவசேனா உறவை கெடுத்தவர் இவரே பால்தாக்கரே காலத்தின் உறவை நாசப்படுத்தியவர்


spr
ஏப் 30, 2024 17:58

"இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு அல்லது பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறினார்"உண்மைதான் அவர்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை சொல்லி வைப்போமே என்று சொல்கிறார் அப்படியே ஆட்சி அமைந்தாலும் என்ன அவர்கள் நாட்டை வளமாக்க ஆளப்போவதில்லையே கொள்ளையடிப்பதனை கூட்டாக வைத்திருக்கும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு தந்து நடத்தப் போகிறார்கள் இது அவர்கள் உரிமை ஆனால் ஐந்து என்று சொல்லியிருக்கலாம் வருடத்திற்கு ஒருவர் என்றாவது அவர்களுக்குள் மனத்திருப்தி உண்டாகும்


Nagarajan
ஏப் 30, 2024 13:09

நாட்டு மேல் அக்கறை இல்லாத பதவி வெறி கொண்ட அரசியல்வாதி வளர்ச்சி கொள்கை ஏதும் மக்களிடம் நேரடியாக வைக்காமல் மோடிஜி வேண்டாம் என்ற வெறுப்பு நாட்டை துண்டாட நினைக்கும் இது போன்ற சந்தர்ப்பவாதிகளை இவரின் கட்சி நிறுவனர் பால் தக்காரே ஆத்மா கூட மன்னிக்காது வாழ்க பாரதம்


S.V.Srinivasan
ஏப் 30, 2024 12:00

நாடு உருப்படும் ஏம்பா பொழுது போகாம வாய்க்கு வந்ததா உளறிக்குட்டு திரியிறீங்க


Balki
ஏப் 29, 2024 17:17

அப்படீன்னா ஸ்டாலின் PM ஆகுறது CONFIRM?


Sankaran
ஏப் 29, 2024 16:58

இந்தியாவில் சிவசேனா மாபெரும் கட்சி பதவிக்காக இவ்வளவு பேச்சு வேதனையாக உள்ளது


K.Muthuraj
ஏப் 30, 2024 09:07

எப்பொழுதும் சிவசேனா அந்த வூரு கட்டுமர கட்சி நமக்குத்தான் இங்கிருந்து பார்க்கும்பொழுது எதோ உத்தமர்கள் நிறைந்த கட்சி போல் தோன்றும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ