உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா முதல்வர் 2 தொகுதிகளில் போட்டி

ஒடிசா முதல்வர் 2 தொகுதிகளில் போட்டி

புவனேஸ்வர், ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக், கந்தபஞ்ஜி மற்றும் பாரம்பரியமான ஹின்ஜிலி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.ஒடிசாவில் மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இங்கு மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் நேற்று, ஒன்பது வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். இதன் வாயிலாக, சட்டசபை தேர்தலுக்கான 126 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக், போலங்கீர் மாவட்டத்தில் உள்ள கந்தபஞ்ஜி மற்றும் ஹின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் ஹின்சிலி மற்றும் பிஜேப்பூர் ஆகிய இரு தொகுதிகளில் பட்நாயக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும் பிஜேப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
ஏப் 18, 2024 14:09

மற்றொரு தொகுதிக்கு தேர்தல் வைத்தால் அதன் அனைத்து செலவுகளையும் இவரை ஏற்க செய்யவேண்டும் , இவர் செய்த தவறுக்கு மக்கள் வரிப்பணத்தை ப்படி வீணாக்க முடியும் இதற்க்கு சம்மதம் இல்லை என்றால் ஒருவர் ஒரு இடத்தில மட்டுமே போட்டியிடவேண்டும் என்று சட்டத்தை மாற்றவேண்டும் வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஏப் 18, 2024 14:08

விரைவில் கட்சியே பிஜெபி யுடன் இணையப் போகிறது . கடைசி தேர்தலில் கொஞ்சம் ஷோ காட்ட வேண்டியுள்ளது. உபயம். பாண்டியன்?


Mani . V
ஏப் 18, 2024 06:17

பின்னர் ஒரு தொகுதியில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தால், மீண்டும் தேர்தல் நடத்த ஆகும் மொத்தச் செலவையும் இவரிடம் வசூல் செய்ய வேண்டும் அப்பொழுதான் வரும் காலத்தில் யாரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட மாட்டார்கள்


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ