| ADDED : ஜூன் 16, 2024 07:25 AM
பெங்களூரு: மாநிலம் முழுதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டி கூடங்களில் உணவு பரிசோதனை செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.மாநிலத்தின் சில மாவட்டங்களில் சமீப காலமாக உணவு விஷமானது; அசுத்தமான குடிநீர் குடித்து பலர் பாதிக்கப்பட்டும், சிலர் உயிரும் இழந்துள்ளனர்.இதை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரம் துறை கமிஷனர் சீனிவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாநிலம் முழுதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டி பார்களில் சுகாதாரமற்ற, அசுத்தமான உணவுகள், கலப்பட பொருட்கள், காலாவதியான பொருட்கள் பயன்படுத்துவது குறித்த செய்திகள், ஊடகத்தில் வெளியாகின.பொதுமக்கள் நலன் கருதி, தரம், துாய்மையை பராமரிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தரம் நிர்ணய சட்டம் 2006 மற்றும் 2011 விதிகளின்படி, ஹோட்டல்கள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்த பரிந்துரைக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.இதையடுத்து மாநிலம் முழுதும் உணவகங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.பெங்களூரு கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட இந்திரா நகரில் உள்ள ராமேஸ்வரம் கபே உட்பட பல உணவகங்களில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆய்வுக்காக உணவு பொருட்களை எடுத்துச் சென்றனர்.ராமேஸ்வரம் கபேயில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இடம்: இந்திரா நகர், பெங்களூரு.