உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவிலில் நீர்க்கசிவு ஆறு அதிகாரிகள் சஸ்பெண்ட்

ராமர் கோவிலில் நீர்க்கசிவு ஆறு அதிகாரிகள் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பெய்த பலத்த மழையால், ராமர் கோவில் உட்பட பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதை அடுத்து, அதற்கு காரணமான ஆறு அதிகாரிகளை மாநில அரசு 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் எழுப்பப்பட்டது. இந்த கோவிலின் பிராண பிரதிஷ்டை விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜன., 22ல் கோலாகலமாக நடந்தது. கடந்த சில நாட்களாக அயோத்தியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ராமர் கோவில் செல்லும் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன. கோவிலுக்கு செல்லும் முக்கிய பாதையில், 14 கி.மீ., துாரத்துக்கு குழிகள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கின. அதுபோல், ராமர் கோவிலின் கருவறை கூரையில் இருந்து நீர் கசிந்ததால் கோவிலின் உள்ளேயும் மழைநீர் தேங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 'இது மழையால் ஏற்பட்ட கசிவு அல்ல. முதல் தளத்தில் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணியால் தண்ணீர் கசிந்தது' என, கோவில் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 'கோவில் கும்பாபிஷேகம் செய்து ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், நீர்க்கசிவு ஏற்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில், மாநில அரசின் துரித நடவடிக்கைகளால் கோவில் வளாகம் மற்றும் பாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டது.குண்டும் குழியுமாக இருந்த சாலைகளும் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக் குறைவால், கோவில் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு காரணமான ஆறு பேரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sampath Kumar
ஜூலை 03, 2024 12:05

இதை விட ஒரு கேவலம் வேண்டுமா இந்த மத்திய அரசுக்கு தேர்தலுக்கு முன்னாடி கட்டி முடிப்போம் என்று சொல்லி அவசர கோலத்தில் கட்டி இப்டி கேவல படுத்தி விட்டார்கள் ராமரை அவரின் கோபத்துக்கு நிச்சயம் இந்த கையாலாகாது அரசு பதில் சொல்லியே ஆகணும்


D.Ambujavalli
ஜூன் 30, 2024 16:35

அரசுப்பணத்தில் கட்டியிருந்தால் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும் இதிலிருந்து வரிப்பணம்தான் கோயில் ஆனது என்று தெளிவாகிறது


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 01, 2024 23:56

அட அறிவாளி, ஹிந்து பெயரில் இப்படி கேவலமான கருது எழுத வெட்ட்கம இல்லையா ? கோவில் கட்ட எத்தனை கோடி வந்தது என்ற செய்திகளை படிக்கவில்லையா ? ரோடு போட்டது அரசாங்க அதிகரித்தான்? அப்படியே வரி பணத்தில் கட்டி இருந்தாலும் என்ன தவறு? ஹிந்துக்களின் வரி பணம் தானே? ஹிந்துக்களின் வரி பணத்தில்தான் மெக்காவிற்கும், ஜெருசலேமிற்கும் செலவு செய்கிறதை கேட்க வாய் இருக்கிறதா? தமிழகத்தில் எந்த அதிகரிமீதாவது நடவடிக்கை எடுக்க பட்டு இருக்கிறதா?


venugopal s
ஜூன் 30, 2024 12:25

இந்தக் கோவிலை கட்டியது ஒரு தனியார் டிரஸ்ட் சார்பாக ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் என்று சங்கிகள் உருட்டினார்களே, அது உண்மை என்றால் அதில் உள்ள குறைபாட்டுக்கு எதற்கு அரசு அதிகாரிகள் ஆறு பேரை மாநில அரசு சஸ்பென்ட் செய்ய வேண்டும்?


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 15:00

அரசு கட்டியது என்பதற்கு ஆதாரம் கொடுங்கள் பார்ப்போம். ஆலயத்துக்கு வெளியே உள்ள பாதையில் தண்ணீர் நின்றாலும் அரசு அதிகாரிகளே பொறுப்பு


அப்புசாமி
ஜூன் 30, 2024 08:37

சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியது வேற ஒரு ஆளு.


syed ghouse basha
ஜூன் 30, 2024 00:31

அப்போ நீர்கசிவு இல்லைனு சொன்னது பொய்யா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை