வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேர்தல் திருவிழா என்ற பெயரில் அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர் அதிகார வர்க்கத்திற்கு தேதி தவறாமல் SAMPALAM கொடுக்கும் பணியை மட்டும் நிறுத்தி வைக்கவில்லை வேலை இல்லை என்பதால் சம்பளம் இல்லை என
பெங்களூரு, : பெங்களூரில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தும், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், அலுவலகத்தில் தலை காண்பிக்கவில்லை. பொது மக்களை அலைய வைக்கின்றனர்.பெங்களூரு சென்ட்ரல், பெங்களூரு வடக்கு, தெற்கு மற்றும் ரூரல் லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26ல் ஓட்டு பதிவு முடிந்தது. ஓட்டுப்பதிவு முடிந்து பத்து நாட்களாகியும், மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபடவில்லை. அலுவலகங்களுக்கும் வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏமாற்றம்
பொம்மனஹள்ளி மண்டலத்தின் மாநகராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதிகாரிகள், எப்போதாவது அலுவலகத்தில் தலை காண்பிக்கின்றனர். நிர்ணயித்த நேரத்தில் வருவது இல்லை; அப்படியே வந்தாலும், ஏதோ ஒரு காரணத்தை கூறி, வெளியே செல்கின்றனர்.பணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதை விட, மாநகராட்சி அலுவலகத்தின் அக்கம், பக்கங்களில் உள்ள டீக்கடைகளில் அதிகமாக பொழுதை கழிக்கின்றனர். லஞ்சம் கொடுப்பவர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை மட்டும், விரைவில் கவனிக்கின்றனர்.தங்களின் பணிக்காக வரும் பொது மக்கள், அதிகாரிகள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பல முறை அலைய வைக்கின்றனர். கோப்புகளில் இல்லாத தவறை கண்டுபிடித்து, தொந்தரவு செய்வதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலை காரணம் காண்பித்து, இரண்டு, மூன்று மாதங்களாக பணிகளை செய்யாமல் அதிகாரிகள் தாமதித்தனர். ஓட்டுப்பதிவு முடிந்தும், அலுவலகத்துக்கு ஆஜராகாதது சரியல்ல என, அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்டட வரைபடத்துக்கு அனுமதி பெறுவது உட்பட பல்வேறு பணிகள் தாமதமாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேர்தல் திருவிழா என்ற பெயரில் அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர் அதிகார வர்க்கத்திற்கு தேதி தவறாமல் SAMPALAM கொடுக்கும் பணியை மட்டும் நிறுத்தி வைக்கவில்லை வேலை இல்லை என்பதால் சம்பளம் இல்லை என