உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓவர் ஸ்பீடு: விசாரித்த போலீஸ் ஸ்டேஷன் மீது 100 பேர் தாக்குதல்

ஓவர் ஸ்பீடு: விசாரித்த போலீஸ் ஸ்டேஷன் மீது 100 பேர் தாக்குதல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஓவர் ஸ்பீடு குறித்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையில் 100 பேர் கொண்ட கும்பல் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதலை நடத்தி உள்ளது.பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் ஷிங்கர் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அருகே செக் போஸ்ட் அமைக்கப்பட்டு இருந்தது. இப்பகுதியில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடைக்காரர் ஒருவர் தனது மகனுடன் ஸ்கூட்டரில் ஓவர் ஸ்பீடு ஆக கடந்து சென்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்ததுவற்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கடைக்காரர் தனது மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அப்பகுதிக்கு வந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்த பூந்தொட்டிகளை உடைத்ததுடன், அலுவகத்தை சூறையாடினர். மேலும் காவல் பணியில் ஈடுபட்டிருந்த உதவி சப்இன்ஸ்பெக்டர் ஒருவரையும் தாக்கியது. தொடர்ந்து மற்றொரு போலீசாரையும் கும்பல் தாக்கி உள்ளது.இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் கடைக்காரர் மற்றும் அவரது ஆதரவாளர்களை அடையாளம் காண, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

subramanian
ஜூலை 28, 2024 22:09

கலவரக்காரர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவர்களுக்கு எந்த விதத்திலும் ஜாமீன் , வாய்தா கொடுக்க கூடாது.


Ramesh Sargam
ஜூலை 28, 2024 21:31

இந்தக்காலத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அப்புறம் அவர்கள் எப்படி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை