உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., விதி ராகுலுக்கு தெரியவில்லை: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் தாக்கு

பார்லி., விதி ராகுலுக்கு தெரியவில்லை: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ராகுல் எதிர்க்கட்சி தலைவராக மாறியிருக்கலாம். ஆனால் அவருக்கு பார்லிமென்ட் விதிகள் குறித்து தெரியவில்லை' என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினார்.புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பார்லிமென்டில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து அர்ஜூன் ராம் மேக்வால் கூறியிருப்பதாவது: புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்கள் பயனடைவார்கள். அவர்களின் வாழ்க்கை எளிதாகும். இ-கோர்ட், இ-சிறை, இ-வழக்கு அனைவருக்கும் உதவும். ராகுல் எதிர்க்கட்சி தலைவராக மாறியிருக்கலாம். ஆனால் அவருக்கு பார்லிமென்ட் விதிகள் குறித்து தெரியவில்லை. அவர் ஹிந்துக்களை வன்முறையாளர்கள் எனக் கூறுகிறார். லோக்சபாவில் ராகுல் பேசியதை நாங்கள் முழுமையாக கேட்டோம். ஆனால் எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடி பேசியதை கேட்கவில்லை. ஆனால் பிரதமர் மோடியின் பேச்சை நாட்டு மக்கள் அனைவரும் கேட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

J.Isaac
ஜூலை 09, 2024 08:11

ஒரு அமைச்சர், கட்சி கொடியை தலையில் கட்டியிருப்பதே, அவர் நிச்சயமாக பாரபட்சமாக தான் செயல்படுவார். பிறவி குணம் எளிதில் மாறாது


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 05:09

பப்பு.... தெருமுனைக் கூட்டத்தில் பேசுவது போல் பேசி விட்டு போய் விடலாம் என்று நினைத்து இருப்பார்.... இப்படி திருப்பி பதிலடி கொடுத்து வெளுத்து வாங்குவார்கள் என்று நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்.... அதுவும் பதிவாகி விட்டது..... இதை தான் வாயை கொடுத்து.... எதையோ புண் ஆக்கிக் கொள்வது என்பார்கள்.


J.Isaac
ஜூலை 09, 2024 08:13

பப்பு, பப்பு என்று சொல்லி நீங்கள் பப்புவாக நடந்து அவரை பாபுவாக மாற்றிவிடுவீர்கள்


R.Varadarajan
ஜூலை 07, 2024 22:28

பிஞ்சு கடந்த காலத்தில் எவ்வளவு நாட்கள் நாடாளுமன்றத்தில் ஆஜர் ஆகி பங்கேற்றிருக்கிரார் எனும் விவரம் தெரிந்தால் நலம்.


sankaranarayanan
ஜூலை 07, 2024 20:42

பகவான் கிருஷ்ணர் அரஜுனனுக்கு கீதை உபதேசம் செய்தார் என்று சரித்திரம் உள்ளது ஆனால் இப்போது இந்த அமைச்சர் அர்ஜுன் ராம் பப்புவிற்கு பாராளுமன்ற விதிகள் உபதேசம் செய்ய முன் வந்துள்ளார் வரவேற்போம்


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2024 17:32

சும்மா பேசாதீங்க உடனே தகுந்த நடவடிக்கை எடுங்க இல்லேன்னா இந்த உளறல் கட்டுப்பாடில்லாமல் இப்படித்தான் இருக்கும்


J.Isaac
ஜூலை 07, 2024 19:00

மொட்டை கடிதாசிக்கு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்


Saai Sundharamurthy AVK
ஜூலை 07, 2024 16:09

"அரசியலமைப்பு என்றால் என்ன", என்று கூட தெரியாத ஒரு எதிர்க்கட்சி தலைவர் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் எவ்வளவு பக்கங்கள் இருக்கிறது என்று கூட தெரியாமலும், அதை ஒழுங்காக படிக்காமலும், பார்லிமென்டில் வந்து பேசுகிறார். உளருகிறார். பிதட்றுகிறார். வெட்கக்கேடு. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கே லாயக்கற்றவர்.


J.Isaac
ஜூலை 07, 2024 18:56

அரசியலமைப்பு சட்டம் முதலில் உங்களுக்கு தெரியமா ? சாதரண மக்கள் எத்தனை குடி பேருக்கு தெரியும்


J.Isaac
ஜூலை 07, 2024 19:47

நீங்கள் படித்திரிக்கிறீர்களா?


Balasubramanian Rajagopalan
ஜூலை 07, 2024 15:51

தயாநிதி மாறன் திமுக துண்டு போட்ருந்தார்


nizam
ஜூலை 07, 2024 14:44

முதல்ல கட்சி தலைபாகை கட்டியிருக்கே அதுவே மீறல்


Barakat Ali
ஜூலை 07, 2024 15:30

கட்சி சார்பான நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் என்றால் கட்சிக்கொடி வண்ணத்தில் தலைப்பாகை அணிவதில் என்ன தவறுங்க ????


Senthoora
ஜூலை 07, 2024 14:10

உங்க ஆளுக்கு தேர்தலில் எப்படி பேசணும், எப்படி நடாத்தனும் என்று தெரியாது.


Barakat Ali
ஜூலை 07, 2024 15:31

தேர்தலை நடத்துவது பிரதமரா ????


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 07, 2024 13:56

அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் நேபாள் , தாய்லாந்தில் முத்துக் குளிப்பதுதான் ....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ