உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குவியும் சடலங்கள்

குவியும் சடலங்கள்

நிகம்போத் காட்:மருத்துவமனைகளில் வெப்ப சலனம் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், நகரின் நிகம்போத் காட் சுடுகாட்டில் தகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இறந்தவர்கள் வெப்ப வாதத்தால் இறந்தார்களா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளால் முடியவில்லை.இந்த சுடுகாட்டில் மட்டும் புதன்கிழமை தகனத்திற்காக 142 சடலங்கள் கொண்டு வரப்பட்டன. இது வழக்கத்தை விட அதிகம். இங்கு தினமும் சராசரியாக 50 முதல் 60 உடல்கள் மட்டும் கொண்டு வரப்படும்.நேற்று முன் தினம் 136 சதவீதம் அதிகரித்தன. செவ்வாய்க்கிழமை 97 உடல்கள் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.“இன்று (நேற்று) காலை முதல் 35 தகனங்கள் நடந்துள்ளன. இரவுக்குள் மேலும் அதிகரிக்கும்,” என, நிகம்போத் காட் சுடுகாட்டின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் சஞ்சலன் சமிதியின் பொதுச் செயலர் சுமன் குப்தா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை