உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வைரத்தில் பிரதமர் மோடியின் படம்: சூரத் கைவினை கலைஞர்கள் அசத்தல்

வைரத்தில் பிரதமர் மோடியின் படம்: சூரத் கைவினை கலைஞர்கள் அசத்தல்

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 8 காரட் வைரத்தில், பிரதமர் மோடியின் படத்தை வடிவமைத்து 20 கைவினை கலைஞர்கள் அசத்தி உள்ளனர்.குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள், பிரதமர் மோடியின் படத்தை வைரத்தில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர். 20 பேர் இணைந்து ஒரு மாதத்திற்கு மேல் வேலை பார்த்தனர். ஆரம்பத்தில் 40 காரட் வைரத்தில் பிரதமர் மோடியின் படத்தை வடிவமைத்துள்ளனர். வடிவத்திற்காக வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்ட பிறகு, அதன் அளவு 8 காரட்டாக குறைந்தது. இந்த 8 காரட் வைரம், கண்காட்சியில் வைக்கப்பட்டது. கண்காட்சியை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பார்வையிட்டார். வைரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்று இருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 14, 2024 18:07

எப்படி செய்தார்கள் என்று சொல்லியிருந்தால் அவர்களின் தொழில் கைவரிசை இன்னும் ஆறாக புரிந்திருக்கும். 40 காரட் வைரம் 8 காரட் ஆனது ஓகே???அவர்கள் கைவினை செயல்கள் இன்னும் தெரியவேண்டும் 20 Craftsmen in a month from SK company, Surat, Gujarat - diamond-making company crafted 40-carat Lebron diamond by shaping and grinding / polishing thus it has became 8 carat with the image of Prime Minister Narendra Modi


sriraju
ஜூலை 14, 2024 17:44

கைவினைக் கலைஞர்களின் உழைப்புக்கு பாராட்டு


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ