உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதைப்பொருள் சப்ளை செய்த போலீஸ் கைது

போதைப்பொருள் சப்ளை செய்த போலீஸ் கைது

புதுடில்லி:தலைநகர் டில்லி மற்றும் புறநகரில் போதைப்பொருள் சப்ளை செய்த டில்லி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ஒருவர், தன் நண்பருடன் சேர்ந்து டில்லி மற்றும் புறநகரில் போதைப் பொருள் சப்ளை செய்தார்.சிறப்புப் பிரிவு போலீசார், ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் இரவு அதிரடி சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த சொகுசு காரில் இருந்து 1 கோடி ரூபாய் சர்வதேச சந்தை மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ