மேலும் செய்திகள்
பீஹாரில் மெட்ரோ ரயில் துவக்கம்
18 minutes ago
ரூ.100 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக குடும்பத்தினரை கொன்ற நபர் கைது
3 hour(s) ago | 2
பெங்களூரு: பெங்களூரில் இரட்டை அடுக்கு மேம்பாலம் திறப்பு விழாவின்போது, 'சீட் பெல்ட்' அணியாமல் கார் ஓட்டிய சிவகுமார் மீது, சமூக ஆர்வலர் புகார் செய்துள்ளார்.பெங்களூரு ராகிகுட்டா - சென்ட்ரல் சில்க் போர்டு இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 3.36 கி.மீ., துாரத்துக்கு 'ஈரடுக்கு மேம்பாலம்' கட்டப்பட்டது. முதல் பாலத்தில் சாலைப் போக்குவரத்தும், இரண்டாவது பாலத்தில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.இந்த மேம்பாலத்தை, ஜூலை 17ல் துணை முதல்வர் சிவகுமார் திறந்துவைத்தார். அத்துடன், ராகிகுட்டாவில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை அவரே காரை ஓட்டினார். அவர் அருகில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்கில் பரவியது. அதில் பலரும், 'நாங்கள் போக்குவரத்து விதிகளை மீறினால், வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலிக்கும் போக்குவரத்து போலீசார், துணை முதல்வர் சிவகுமார் 'சீட் பெல்ட்' அணியாமல் செல்கிறார்.அதற்கு போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, அபராதம் விதிக்க வேண்டும்' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.மறுபுறம் சமூக ஆர்வலர் விஜய் டென்னிஸ், போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், 'மேம்பாலம் திறப்பு விழாவில், சீட் பெல்ட் அணியாமல் துணை முதல்வர் கார் ஓட்டி உள்ளார். 'போக்குவரத்து விதிகளின்படி, சீட் பெல்ட் அணியாமல் ஒட்டியது தண்டனைக்குரிய குற்றம். சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். எனவே போக்குவரத்து விதிகளை மீறிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
18 minutes ago
3 hour(s) ago | 2