உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை பொருள் விற்றவரை சுட்டுபிடித்தது போலீஸ்

போதை பொருள் விற்றவரை சுட்டுபிடித்தது போலீஸ்

ஹொஸ்கோட்,: போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்ப முயன்ற, போதை பொருள் விற்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் சுங்கச்சாவடி அருகே, நேற்று முன்தினம் இரவு மூன்று வாலிபர்கள் போதை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து ஹொஸ்கோட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்கிற்கு தகவல் கிடைத்தது. போலீஸ்காரர்களுடன், சுங்க சாவடி அருகே இன்ஸ்பெக்டர் அசோக் ஜீப்பில் சென்றார்.அப்போது போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர், தன் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, இரண்டு போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்பினார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் அசோக், துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்து விடும்படி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அந்த நபர் சரண் அடையவில்லை. இதனால் அவரை நோக்கி இன்ஸ்பெக்டர் அசோக் துப்பாக்கியால் சுட்டார். அவரது வலது காலில் குண்டு துளைத்தது. சுருண்டு விழுந்தவர் கைது செய்யப்பட்டார்.ஹொஸ்கோட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் சுஹைல், 27 என்பது தெரிந்தது. தாக்குதலுக்கு ஆளான இரண்டு போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை