உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.180 கோடி வீட்டை திரும்ப பெறும் பிரபுல் படேல்

ரூ.180 கோடி வீட்டை திரும்ப பெறும் பிரபுல் படேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியை சேர்ந்த பிரபுல் படேல் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இவரது மனைவி வர்ஷா மற்றும் அவரது, 'மில்லினியம் டெவலப்பர்' நிறுவனத்தின் பெயரில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஒர்லி பகுதியில், 'சீஜெ ஹவுசின்' அடுக்குமாடி குடியிருப்பில் இரு தளங்கள் வாங்கப்பட்டன. இதன் மதிப்பு, 180 கோடி ரூபாய். மும்பை முன்னாள் தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த ஹஜ்ரா மேமனின் முதல் மனைவி இக்பால் மிர்ச்சியிடம் இருந்து, இந்த சொத்து சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது. அத்துடன் அந்த சொத்தையும் அதிகாரிகள் முடக்கினர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இக்பால் மிர்ச்சிக்கும், பிரபுல் படேல் மனைவி வாங்கிய சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, சொத்தை பறிமுதல் செய்தது செல்லாது' என்றார். இதையடுத்து, மும்பையில் உள்ள 180 கோடி ரூபாய் சொத்து பிரபுல் படேல் வசம் மீண்டும் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்