உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய தேர்வு முகமை தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம்:நீட் முதுநிலை (pg) தேர்வு ஒத்திவைப்பு

தேசிய தேர்வு முகமை தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம்:நீட் முதுநிலை (pg) தேர்வு ஒத்திவைப்பு

புதுடில்லி: நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நாடு முழுவதிலும் நடைபெற்ற நீட் மற்றும் நெட் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளில் நிகழ்ந்ததை அடுத்து பெரும் பிரச்னையை எதிர்கொண்டது தேசிய தேர்வு முகமை.இது குறித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.மேற்கண்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை ஒப்புக்கொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தலைவருமான பிரதீப் சிங் கரோலா என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

நீட் முதுநிலை (pg) தேர்வு ஒத்திவைப்பு

நாளை(23.06.2024) நடைபெற இருந்த நீட் முதுநிலை(pg) தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதுஎம்.டி.,எம்எஸ்,முதுகலை டிப்ளமோ மருத்துவபடிப்புகளில் சேர்வதற்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கடந்த 18-ம் தேதி தேர்வு எழுதுவற்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் முதுநிலை தேர்வின் செயல்முறைகளை மதிப்பீடு செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் தேசிய தேர்வு முகமை தேர்வு தலைவர் மாற்றப்பட்ட நிலையில் சுகாதாரதுறை அமைச்சகம் அதிரடியாக மேற்கண்ட உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Svs Yaadum oore
ஜூன் 23, 2024 05:41

முதலில் தமிழ் நாட்டில் சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வை முறையாக நடத்த விடியல் முயற்சி செய்யட்டும் ....அப்பறம் மாநில உரிமையை மீட்கலாம் .... வெறும் 6000 குரூப் 4 பணியாளர் தேர்வுக்கு தமிழ் நாட்டில் 20 லட்சம் நபர்கள் தேர்வு எழுதும் நிலைமை ....இந்த தேர்வில் நடந்த ஏகப்பட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க பாட்டாளி அறிக்கை ...இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் . ....... தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த கூட இந்த விடியலுக்கு வக்கில்லை . ....இந்த அழகில் விடியல் மத்திய அரசை குறை சொல்லுது .....


konanki
ஜூன் 23, 2024 04:53

எங்க தலைவர் பிரதமர் ஆனவுடன் முதல் கையெழுத்து போட்டு நீக்கிடுவார்.


konanki
ஜூன் 23, 2024 04:52

கள்ள குறிச்சியில் பணியிடை நீக்க பட்ட கலெக்டர் சும்மா தான் இருக்கிறாராம். அவரை நியமித்தால் சூப்பரா இருக்கும்.


அரசு
ஜூன் 22, 2024 23:00

நம் நாட்டில் துக்ளக் ஆட்சி தான் நடக்கிறது.


S BASKAR
ஜூன் 22, 2024 22:34

நெட் ரத்து , பிஜி நீட் தள்ளி வைப்பு , நீட்யூகி மட்டும் நடுவுல ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கு.... என்னடா இது பிஜேபி ஆட்சிக்கு வந்த சோதனை ?


Priyan Vadanad
ஜூன் 22, 2024 22:24

தேர்வு தலைமையை மாற்றிகொண்டிருப்பதற்கு பதிலாக இந்த நீட்டை கொண்டுவந்தவர்களே மாறலாமே பதவி சுகம் சும்மா விட்டுவிட்டு போய்விடுமா?


Priyan Vadanad
ஜூன் 22, 2024 22:22

கேவலம் தலைவர்களை மாற்றி தங்களது குறைகளை பூசி மெழுகுவதைவிட பேசாமல் நீட்டையும் குட்டையையும் எடுத்துவிட்டால் என்ன? கவுரவமும் பிடிவாதமும் தடுக்கிறது பெரும்பான்மை இருந்த நேரத்தில் இன்னும் எத்தனை நீட் தவறுகள் மறைக்கப்பட்டதோ தெரியவில்லை.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ