உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 4ல் இண்டியா கூட்டணிக்கு அடி பீஹாரில் பிரதமர் மோடி பேச்சு

ஜூன் 4ல் இண்டியா கூட்டணிக்கு அடி பீஹாரில் பிரதமர் மோடி பேச்சு

மோதிஹாரி, ''இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள், வகுப்புவாதிகள்; ஜாதி வெறியர்கள் மற்றும் வாரிசு அரசியலை பின்பற்றுபவர்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ல், இக்கூட்டணிக்கு பெரிய அடி விழும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

வேடிக்கை

இங்குள்ள மஹாராஜ்கஞ்ச், பூர்வி சம்பாரண் ஆகிய லோக்சபா தொகுதிகளில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தை கொடுத்தது பீஹார். இந்த மாநிலத்தை, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி குட்டிச்சுவராக்கி உள்ளது. பஞ்சாப், தெலுங்கானா, தமிழகம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் பீஹார் மக்களை, காங்., மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் அவமதிக்கின்றனர். ஆனால் அவர்களை கண்டிக்காமல், காங்., மேலிடம் வேடிக்கை பார்த்து வருகிறது.எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்து, ஓட்டு ஜிஹாத் செய்வோருக்கு அளிக்க காங்., விரும்புகிறது.பா.ஜ., இருக்கும் வரை, இது நடக்காது; நடக்கவும் விட மாட்டோம். அம்பேத்கர் இல்லையென்றால், எஸ்.சி., - எஸ்.டி.,களுக்கு இட ஒதுக்கீட்டை நேரு அனுமதித்திருக்க மாட்டார்.இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் வகுப்புவாதிகள்; ஜாதி வெறியர் மற்றும் வாரிசு அரசியலை பின்பற்றுபவர்கள். நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாத இக்கூட்டணிக்கு, தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள ஜூன் 4ல், பெரிய அடி விழும்.

மாபெரும் தவறு

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்காதவர்கள், ஊழல்வாதிகளுடன் இணைந்து உணவு அருந்துகின்றனர். காங்., செய்த மாபெரும் தவறுகள், என் 10 ஆண்டு கால ஆட்சியில் சரி செய்யப்பட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகள் என்பது நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது; விரைவான வளர்ச்சியை நாடு காண உள்ளது. தேர்தலில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளித்து, தேச விரோத சக்திகளை நாட்டை விட்டு துரத்தி அடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ