உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீரை சேமிக்க நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

நீரை சேமிக்க நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

சூரத், “உலகில், 4 சதவீத தண்ணீர் வளம் மட்டுமே நம் நாட்டில் உள்ளதால், அதை நவீன தொழில்நுட்ப வழிகள் வாயிலாக அனைவரும் சேமிக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில், 'நீர் சேகரிப்பு - பொது பங்கேற்பு' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் நீரில் இருந்தே தோன்றின. அதனால், நீரைச் சார்ந்தே அனைத்து உயிர்களும் உள்ளன. நீர் பாதுகாப்பு என்பது கொள்கை அல்ல, அது வாழ்க்கையின் ஒரு அங்கம். நீரை பாதுகாப்பதில் தாராள மனப்பான்மை மற்றும் பொறுப்பு அவசியம். எதிர்கால தலைமுறையினர் நம்மை பரிசோதித்தால், அவர்களின் முதல் அளவீடு அவர்களுக்காக நாம் சேர்த்து வைக்கும் தண்ணீராகத்தான் இருக்கும். ஏனெனில் இது வளம் சார்ந்தது அல்ல, மாறாக வாழ்க்கை மற்றும் எதிர்காலம் சார்ந்தது. அதனால் தான் நிலையான எதிர்காலத்துக்கான ஒன்பது தீர்மானங்களில், தண்ணீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை முதன்மையாக்கியுள்ளோம்.நீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது எங்களுக்கு புதிதல்ல. இது, இந்தியாவின் கலாசார உணர்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.நம் கலாசாரத்தில் தண்ணீரை கடவுளாகவும், நதிகளை தெய்வமாகவும் போற்றுகின்றனர். நர்மதை, கங்கை, கோதாவரி, காவிரி ஆறுகள் நம் தாய்மார்கள்.தண்ணீரை சேமிப்பதன் முக்கியத்துவத்தை நம் முன்னோர்களும் அறிந்திருந்தனர். நீர் மற்றும் நதிகளை சேமிப்பது என்ற பெயரில், கடந்த 10 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.'குறைவாக பயன்படுத்துதல், மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் நீர்மட்டத்தை உயர்த்துதல்' என்ற நான்கு மந்திரங்களின் அடிப்படையில் தண்ணீரை நாம் சேமிக்க வேண்டும். அதற்காக நவீன, புதுமையான தொழில்நுட்ப வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை