உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்காத ஒப்பந்ததாரர்களுக்கு சிக்கல்

ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்காத ஒப்பந்ததாரர்களுக்கு சிக்கல்

மைசூரு: ஆழ்துளை கிணறுகளுக்கு மின் இணைப்பு கொடுக்காத 20 ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க அதிகாரிகளுக்கு, சிறிய நீர்ப்பாசன அமைச்சர் போசராஜு உத்தரவிட்டுள்ளார்.சிறிய நீர்ப்பாசன அமைச்சர் போசராஜு, மைசூரு மாவட்டத்தில், துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:மைசூரு மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசன துறை சார்பில் 20 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் அந்த கிணறுகளுக்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. இதில் அலட்சியமாக செயல்பட்ட 20 ஒப்பந்ததாரர்களையும் கருப்பு பட்டியலில் அதிகாரிகள் சேர்க்க வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது அவசியம். லோக்சபா தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்ததால், பல திட்டங்களின் டெண்டர் பணிகள் தாமதமானது.கடந்த 2022-ல் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஏழு ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்திற்கு, டெண்டர் செயல்முறை முடிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இன்னும் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணிகள் துவங்கவில்லை. ஒப்பந்ததாரருக்கு பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை.ஏரிகளை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். கொடுக்கப்பட்ட பணியை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிறிய நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் போசராஜு. இடம்: மைசூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ