உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 30க்குள் சொத்து விபரம்; எம்.எல்.ஏ.,க்களுக்கு கெடு

ஜூன் 30க்குள் சொத்து விபரம்; எம்.எல்.ஏ.,க்களுக்கு கெடு

பெங்களூரு: 'ஜூன் 30ம் தேதிக்குள் சொத்து விபரத்தை, லோக் ஆயுக்தாவில் எம்.எல்.ஏ.,க்கள் சமர்ப்பிக்க வேண்டும்' என, சட்டசபை செயலர் விசாலாட்சி கூறி உள்ளார்.தங்களது சொத்து விபரங்களை கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் ஆண்டுதோறும் லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி, சட்டசபை செயலர் விசாலாட்சிக்கு, லோக் ஆயுக்தா எழுதிய கடிதத்தில், எம்.எல்.ஏ.,க்கள் சொத்து, கடன் ஆகிய விபரங்களை, லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்க உத்தரவிடும்படி கூறப்பட்டிருந்தது.இதையடுத்து சட்டசபை செயலர் விசாலாட்சி வெளியிட்ட அறிக்கையில், 'ஜூன் 30ம் தேதிக்குள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் 2023 - 2024ம் ஆண்டுக்கான சொத்து, கடன் விபரங்களை லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்யும், சொத்து விபரங்களை வைத்தே ஒவ்வொரு ஆண்டும், அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயருகிறது என்று, கணக்கிடப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை