உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகை வியாபாரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் கூலிப்படை அட்டூழியம்

நகை வியாபாரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்; பிஷ்னோய் கூலிப்படை அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: புனே நகை கடை வியாபாரியிடம் லாரன்ஸ் பிஷ்னோய் கூலிப்படையினர் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலைக்கு சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த சூழலில், இன்று(அக்.,20) புனேவில் பிரபல நகை வியாபாரி ஒருவருக்கு பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ரூ.10 கோடி தராவிட்டால் கொன்றுவிடுவோம் என நகைக்கடை வியாபாரிக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.இது குறித்து போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த அச்சுறுத்தல் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகைக்கடை வியாபாரி பெயர் உள்ளிட்ட எந்த தகவலும் போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
அக் 20, 2024 17:36

சல்மான் கானிடம் ரூ 5 கோடி இந்த நகை வியாபாரியிடம் ரூ 10 கோடியா பலே பேஷ் பிஷ்ணோய் கூலிபடையே???இதை போலீஸ் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும்???என்ன ஒரு எருமையான மவுனம் போலீஸ் துறையில், அநீதிமன்றத்துறையில்...


Anantharaman Srinivasan
அக் 20, 2024 14:19

சிறையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எதற்காக தண்ட சோறு போட்டு அரசு செலவில் காப்பாற்றப்படுகிறது.?? என்கவுண்டர் செய்யலாமே..??


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 13:08

இது பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடக்குதே, என்ன பண்ணலாம்??


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 20, 2024 16:49

தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பானவர்கள் - மூன்றே ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் கொலை - உடனே பதவி விலகினால் மஹாராஷ்டிராவிலும் அது நடக்கும் ..... கேட்டுச்சொல்றீங்களா ???? எப்படி வசதி ????


என்றும் இந்தியன்
அக் 20, 2024 17:38

அதான் ஸ்டாலின் அன்றே சொன்னாரே இந்தியா பூராவும் திராவிட மாடல் என்று அது தான் இது


வைகுண்டேஸ்வரன்
அக் 20, 2024 13:06

இதுவே தமிழ் நாட்டில் நடந்தால், திராவிட மாடல் இதுவா, விடியலையா என்று கூவலாம். இது பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடக்குதே, என்ன பண்ணலாம்??


N Sasikumar Yadhav
அக் 20, 2024 15:54

என்னவோ உங்க திருட்டு திராவிட மாடலில் பாலும் தேனும் ஓடுகிற மாதிரி பேசுகிறீர் பயங்கரவாத ஆதரவாளர்கள் NIAவால் அதிகமாக கைதுசெய்யப்படுவது உங்க திராவிட மாடல் ஆட்சியில்தான்


ganapathy
அக் 20, 2024 12:48

நகைவியாபாரி கிட்டதானே கேட்டான்? அம்மா உணவகத்தில் உணவு அருந்தும் ஏழையிடம் இல்லையே. ஏனிந்த புலம்பல்?


Ramesh Sargam
அக் 20, 2024 12:23

தினமும் பிஷ்ணோய் இப்படி செய்தான், அவன் கூலிப்படை இப்படி செய்தது என்றுதான் செய்தி. என்று அந்த பிஷ்ணோய் அவன் கூட்டாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு அவர்கள் கதை முடிக்கப்படும். அந்த செய்தியைத்தான் மக்கள் படிக்க விரும்புகிறார்கள். நீதிமன்றங்கள் சுறுசுறுப்பாக என்று இந்தியாவில் செயல்படும்.


சம்பா
அக் 20, 2024 11:54

இது நாடா அரசனு ஒன்னு இருக்குதா சேடு கெட்ட அரசு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை