உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு கூடுதல் நிதி ; மாநிலம் வாரியாக விவரம் தந்தார் ரயில்வே அமைச்சர்

தமிழகத்திற்கு கூடுதல் நிதி ; மாநிலம் வாரியாக விவரம் தந்தார் ரயில்வே அமைச்சர்

புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு என்றும், இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.2024 -25க்கான நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் 2.65 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதாகவும், தமிழகத்திற்கு 6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ., ஆளும் சில மாநிலங்களை விட அதிகம் ஆகும். இதனை விட பல மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு பாதை அமைக்க சர்வே செய்யப்பட்டது. இது இன்னும் செயல்படுத்த முடியாமல் உள்ளது. 2,759 எக்டேர் நிலம் தேவைப்படுகிறது என தென்னக ரயில்வே கேட்டு கொண்டது. ஆனால் தமிழக அரசு தற்போது 807 எக்டேர் நிலம் ஒதுக்கியது. இதற்கான 871 கி.மீட்டர் பாதை பணிகள் நடந்து வருகிறது. புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். உள்ளூர் திட்டங்களான திண்டிவனம், திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி, ஈரோடு - பழனி போன்ற ரயில்வே திட்டங்களுக்கு 2 மடங்கு நிதி அதிகரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தமிழகத்திற்கு ரூ.6,362 கோடி

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு: * மத்திய பிரதேசம்- (பா.ஜ., ஆட்சி) ரூ.14.738 கோடி நிதி ஒதுக்கீடு. இது 8.08 சதவீதம்.* குஜராத் (பா.ஜ., ஆட்சி) ரூ. 8.743 கோடி நிதி ஒதுக்கீடு. இது 4.79 சதவீதம்.* உத்தரபிரதேசம்- (பா.ஜ., ஆட்சி) ரூ. 19,848 கோடி நிதி ஒதுக்கீடு. இது 10.88 சதவீதம்.* ராஜஸ்தான்- (பா.ஜ., ஆட்சி) ரூ.9,959 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.46 சதவீதம்.* உத்தரகண்ட் - (பா.ஜ., ஆட்சி) ரூ.5,131 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.81 சதவீதம்.* ஹரியானா- (பா.ஜ., ஆட்சி) ரூ.3,383 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.85 சதவீதம். * ஒடிசா- (பா.ஜ., ஆட்சி) ரூ.10,586 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.80 சதவீதம்.* சத்தீஸ்கர்- (பா.ஜ., ஆட்சி) ரூ.6,922 கோடி நிதி ஒதுக்கீடு. இது 3.79 சதவீதம்.* மஹாராஷ்டிரா- (பா.ஜ., கூட்டணி ஆட்சி) ரூ.15,940 கோடி நிதி ஒதுக்கீடு. இது 8.74 சதவீதம்.* பீஹார்- (பா.ஜ., கூட்டணி ஆட்சி) ரூ.10,033 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.50 சதவீதம்.* ஆந்திரா- (பா.ஜ., கூட்டணி ஆட்சி) ரூ.9,151 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.02 சதவீதம்.* ஹிமாச்சல் பிரதேசம்- (காங்., ஆட்சி) ரூ.2,698 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.48 சதவீதம்.* தெலுங்கானா- (காங்., ஆட்சி) ரூ.5,336 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.92 சதவீதம்.* கர்நாடகா- (காங்., ஆட்சி) ரூ.7,559 கோடி நிதி ஒதுக்கீடு. இது 4.14 சதவீதம்.* பஞ்சாப்- (ஆம்ஆத்மி ஆட்சி) ரூ.5,147 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.82 சதவீதம்.* புதுடில்லி- (ஆம்ஆத்மி ஆட்சி) ரூ.2,582 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.42 சதவீதம்.* மேற்குவங்கம்- (திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி) ரூ.13,941 கோடி நிதி ஒதுக்கீடு. இது 7.64 சதவீதம்.* ஜார்க்கண்ட்- (காங்., கூட்டணி ஆட்சி) ரூ.7,302 கோடி நிதி ஒதுக்கீடு. இது 4 சதவீதம்.* கேரளா- (இடதுசாரி ஆட்சி) ரூ.3,011 கோடி நிதி ஒதுக்கீடு. இது 1.65 சதவீதம்.* தமிழகம்- (தி.மு.க., ஆட்சி) ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கீடு. இது 3.49 சதவீதம்.* 7 வடகிழக்கு மாநிலங்கள் ( அருணாசலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா) ரூ.10,376 கோடி நிதி ஒதுக்கீடு. இது 5.69 சதவீதம்.* ஜம்மு காஷ்மீர்- ரூ.3,694 கோடி நிதி ஒதுக்கீடு. இது 2.02 சதவீதம்.அனைத்து மாநிலங்களும் சேர்த்து, மொத்தம் ரூ. 1,82,442 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Krishna Kumar
ஜூலை 29, 2024 21:57

உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், பீஹார், ஜார்கண்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் நிலத்தினாலேயே சூழ பட்ட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாநிலங்கள் . கடத்த 70 வருட காலமாக இந்த மாநிலங்கள் முன்னாள் ஆட்சி செய்தவர்கள் எந்த வித முயச்சியும் எடுக்காமல் புறம் தள்ளபட்டது. இந்த மாநிலங்கள் முன்னேற வேண்டும் என்றால் அதி விரைவில் ராய்வே மற்றும் சாலை போக்குவரத்தை அமைக்க பட வேண்டும்.


Saravana
ஜூலை 29, 2024 10:47

Allocate based on revenue generated atleast. You want allow North Indian to travel ac coaches without booking tickets and others to suffer? Disclaimer - Voted for bjp only


என்றும் இந்தியன்
ஜூலை 28, 2024 19:12

நல்லவேளை நான் I.T. யில் இல்லை. இந்த திமுக திரினாமுல் காங்கிரஸ் முஸ்லீம் நேரு காங்கிரஸ் I.T. யில் இருக்கும் இவர்கள் பாவம் ஒரு வாழ்க்கை வாழவேண்டியிருக்கின்றது. காலையிலிருந்து இரவு வரை பொய் பொய்யாக ஏதோ ஒன்றை எடுத்துக்கொடுத்து மத்திய அரசு மோசம் செய்கின்றது டப்பா அடித்து திமுக திரிணாமுல் காங்கிரஸ் செய்யும் மோசத்தை எல்லாம் மறைத்து????ஐயோ பாவம்


Duruvesan
ஜூலை 28, 2024 15:23

கரெக்ட் moorks


venugopal s
ஜூலை 28, 2024 14:07

பஞ்சாப் ஹரியானா கேரளா ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை விட மக்கள் தொகையில் சிறிய மாநிலங்கள், ஆனால் மக்கள் தொகை சதவீதம் படி பார்த்தால் தமிழகத்தை விட அதிக நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளன.தமிழகத்தை விட மக்கள் தொகையில் சிறிய மாநிலங்களான குஜராத் ஆந்திரா ஜார்க்கண்ட் ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செயாயப்பட்டுள்ளதே, அதற்கு என்ன காரணம்? எப்படிப் பார்த்தாலும் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு இழைப்பது அநீதி, பாரபட்சம் மட்டுமே!


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 14:36

திட்டத்துக்கான நிலம் எங்கே? குறுநில திருட்டு மன்னர்கள் ஆக்கிரமித்து விட்டதால் மாநில அரசால் ரயில்வேக்கு நிலம் தர முடியவில்லை. நிலம் கிடைக்காமல் நிதி எதற்கு? தி.மு.க வின் ஆத்திரம் ரயில்வே திட்டத்தில் ஆட்டையை போட முடியவில்லை. ஸ்டிக்கரை ஒட்டவும் முடியாது என்பதால்தான்.


Kumar Kumzi
ஜூலை 28, 2024 16:32

நிதியை கையில் கொடுத்தால் சாராய ஆலைகள் தான் திறப்பான் விடியல்


subramanian
ஜூலை 28, 2024 16:56

நீங்கள் தானே இரண்டு சதவீதம் என்று சொன்னீர்கள்? இப்போது அதிகம் உள்ளது. பொய், தவறான தகவல்களை வெளியிட்டு விட்டீர்கள்


subramanian
ஜூலை 28, 2024 17:04

வேணு, திருவண்ணாமலை ரயில் வசதி இல்லை , தென் மாவட்ட ரயில் போது போதுமானது இல்லை. திமுகவினர் ஆம்னி பஸ்கள் விட்டு சம்பாதிக்க மக்களை உறிஞ்சும் பூச்சிகள்.


madhan kumar
ஜூலை 28, 2024 19:16

₹200 க்ரெடிட் செய்யப்பட்டது


S. Narayanan
ஜூலை 28, 2024 13:43

படிப்பறிவு இல்லாத திமுகவுக்கு பட்ஜெட் பற்றி எதுவும் புரியாது. யாரோ ஒரு குருட்டு குப்பன் எழுதி கொடுத்ததை படித்து விட்டு நாடகம் ஆடத்தான் தெரியும்


அரசு
ஜூலை 28, 2024 13:15

கோவிட் சமயத்தில் இதே நிதி அமைச்சர் 20 லட்சம் கோடிக்கு உதவி திட்டங்களையும், மான்யங்களையும் அறிவித்தார். அதில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்ற விவரத்தை இப்பொழுது தர முடியுமா?


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 14:16

அதில் பெரும்பாலானவை தனியார் மற்றும் சிறு குறு வணிகர்களுக்கானது.கடன் பெற்றவர்களே கூறாத புகார்களை உங்களுக்கு யார் அளித்தார்? கடன் என்பது வேறு. கடன் வசதி என்பது வேறு.


xyzabc
ஜூலை 28, 2024 13:11

North East should receive more money.


Kumar Kumzi
ஜூலை 28, 2024 13:11

திருட்டு திமுகாவுக்கு ஒரே கவலை கொள்ளை அடிக்க பணம் வரவில்லை என்று தான் மின் கட்டண உயர்வை மறைக்க மக்களை திசை திருப்ப தான் இந்த போராட்டம்


Indian
ஜூலை 28, 2024 12:56

இப்படியே போனால் ஒரு நாளும் தாமரை மலராது .....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி