உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை: போக்குவரத்து தொல்லை

மழை: போக்குவரத்து தொல்லை

புதுடில்லி:தேசிய தலைநகரில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.தெற்கு டில்லி, தென்கிழக்கு டில்லியில் நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், சஃப்தர்ஜங்கில் 9.2 மி.மீ., லோதி சாலையில் 7.4 மி.மீ., ரிட்ஜில் 5.6 மி.மீ., பாலத்தில் 17.4 மி.மீ., அயநகரில் 40.8 மி.மீ., மழை பதிவானது.நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. பல பகுதிகளிலும் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் சாலைகளில் நீண்ட வரிசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உரிய நேரத்தில் தங்கள் இடங்களுக்குச் செல்ல முடியாமல் பயணியரும் வாகன ஓட்டிகளும் திணறினர்.நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டனர்.நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இது பருவத்தின் சராசரியை விட மூன்று புள்ளிகள் குறைவு.பீராகர்ஹி மற்றும் மதுபன் சவுக் இடையேயான இரு மார்க்கங்களிலும் ஒவ்வொரு அங்குலமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. நான் பொதுவாக என் காரில் அலுவலகத்திற்குச் செல்வேன். ஆனால் இன்று (நேற்று) போக்குவரத்து நிலைமை காரணமாக, என் வாகனத்தை பிடம்புரா மெட்ரோ நிலையத்தில் நிறுத்திவிட்டு ரயிலில் சென்றேன்.-- மாயா முகர்ஜி,வடமேற்கு டில்லிமெட்ரோ ரயில் நிலையத்தை அடைய ஐந்து நிமிடங்கள் ஆகாது. ஆனால் இன்று (நேற்று) அங்கு செல்ல 20 நிமிடங்கள் ஆகின. மழை காரணமாக ஆட்டோ ரிக்ஷாக்கள் எதுவும் கிடைக்கவில்லை.- மேகா சிங்,கிழக்கு கைலாஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ