உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழில் பங்குதாரரை சுட்டு கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை 

தொழில் பங்குதாரரை சுட்டு கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை 

ஹாசன்: தொழில் தகராறில், பங்குதாரரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, ரியல் எஸ்டேட் அதிபரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.பீஹாரை சேர்ந்தவர் சரபாத் அலி, 50. ஹாசன் அடுவள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பெங்களூரை சேர்ந்தவர் ஆசிப் அலி, 46. இருவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக தொழில் தொடர்பாக, அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்தது.நேற்று மதியம், ஹாசன் டவுன் ஹொய்சாளா நகர் பகுதிக்கு காரில் சென்றனர். மதியம் 12:30 மணியளவில் துப்பாக்கியால், இரண்டு முறை சுடும் சத்தம், அப்பகுதி மக்களுக்கு கேட்டது.இதையடுத்து, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட இடத்திற்கு மக்கள் சென்று பார்த்த போது, அங்கு நின்று கொண்டிருந்த காரின் வெளியே ஒருவரும், காருக்குள் ஒருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஹாசன் எஸ்.பி., முகமது சுஜிதா, ஹாசன் எக்ஸ்டென்ஷன் போலீசார், அங்கு விரைந்து சென்றனர்.விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட தகராறில், சரபாத் அலியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆசிப் அலி, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ