உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை முதல்வர் பதவி பற்றி பேச மறுப்பு: அமைச்சர் விரக்தி

துணை முதல்வர் பதவி பற்றி பேச மறுப்பு: அமைச்சர் விரக்தி

பெலகாவி: ''துணை முதல்வர் பதவி குறித்து பேச மாட்டேன்,'' என, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார்.பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, நேற்று பெலகாவியில் அளித்த பேட்டி:என் வீட்டிற்கு வருவோரை வராதீர்கள் என்று சொல்லும் நபர் நான் இல்லை. பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார், விட்டல் ஹல்லேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேஷ் குமட்டள்ளி, ஸ்ரீமந்த் பாட்டீல் ஆகியோர் எனது வீட்டிற்கு வந்தனர்.பிற கட்சியினர் வருகைக்காக, எங்கள் கட்சியின் கதவு திறந்தே இருக்கும். எங்கள் கட்சிக்கு வருவோருக்கு கட்டுப்பாடு இல்லை.லோக்சபா தேர்தல் முடிந்த பின், அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதிடம் பேசவில்லை. அவரது தொகுதியில் ஓட்டுகள் குறைந்துள்ளன. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கண்டிப்பாக கேட்பேன்.லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது. இனி துணை முதல்வர் பதவி பற்றி பேசும் அவசியம் இல்லை. இதனால் இனி நான் பேசமாட்டேன்.கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற, எந்த அமைச்சரும் முயற்சி செய்யவில்லை.வட மாவட்ட அரசியல்வாதிகளுக்கு, நடிகர்களுடன் தொடர்பு இல்லை. அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையம் முன், சாமியான பந்தல் அமைக்கப்பட்டிருப்பது பற்றி எனக்கு தெரியாது. அது பற்றி போலீசாரிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை