உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்

ம.பி.யில் ஆள்துளை கிணற்றில் மீட்கப்பட்ட குழந்தை கவலைக்கிடம்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் சிங்கரவுலி மாவட்டத்தில் காஸார் என்ற கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சவுமியா என்ற 3 வயது குழந்தை அங்கு திறந்து கிடந்த 250 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தது.தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் 70 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை 5 மணி நேரம் போராடி மீட்டனர்.உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை மிகவும் கவலைக்கிடமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

V RAMASWAMY
ஜூலை 30, 2024 08:56

ஆள் துணை கிணறுகளில் மடியும் சிறுவர்கள், குழந்தைகளுக்கு கணக்கில்லை, போதிய பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையில்லாமல் ஆள்துணை கிணறுகள் வெட்டுபவர்களை சட்டம் மூலம் ஏன் நடவடிக்கை எடுக்காமல், தண்டனைகள் கொடுக்காமல் இருக்கிறார்கள்? ஏன் பத்திரமாக சிறுவர்களை வெளிக்கொணர பலவித கண்டுபிடுப்புகள் இருந்தும் உபயோக்காமல் திணறுகிறார்கள்?


N.Purushothaman
ஜூலை 30, 2024 07:27

குழந்தை மீண்டு வர எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ... இது போன்ற ஆள் துணை கிணற்றை சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லையென்றால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிப்பதே சிறந்ததாக இருக்கும் ...


Kasimani Baskaran
ஜூலை 30, 2024 05:18

திறந்து கிடக்குமளவுக்கு ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களுக்கு கொலை முயற்சி என்று கருதி தண்டனை வழங்கவேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை