உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுபான ஆலையில் பணியாற்றிய 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

மதுபான ஆலையில் பணியாற்றிய 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரெய்சன்: மத்திய பிரதேசத்தில் உள்ள மதுபான ஆலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட 58 குழந்தை தொழிலாளர்களை, அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ரெய்சன் மாவட்டத்தில் 'சோம் டிஸ்டிலரி' என்ற மதுபான ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், சட்டவிரோதமாக குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தி கொடுமைப்படுத்துவதாக, தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கமிஷனுக்கு புகார் வந்தது.இதையடுத்து, மாநில போலீசாரின் உதவியுடன், 'பச்பன் பச்சாவ் அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து நேற்று அந்த ஆலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 39 சிறுவர், 19 சிறுமியர் உட்பட மொத்தம் 58 பேரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.இதுகுறித்து, பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் இயக்குனர் மணீஷ் சர்மா கூறியதாவது:மதுபானம் மற்றும் ரசாயனங்களுக்கு இடையே 12 முதல் 14 மணி நேரம் வரை இக்குழந்தைகளை சட்டவிரோதமாக பணியில் அமர்த்தி வேலை வாங்கியுள்ளனர். பள்ளிக்கு அழைத்து செல்வதுபோல் பஸ்சில் இந்த ஆலையில் இறக்கிவிட்டு, குழந்தைகளை கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். ரசாயனங்களின் பயன்பாடு காரணமாக, குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய பலரின் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மதுபான ஆலையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து சமூக வலைதளத்தில் முதல்வர் மோகன் யாதவ் குறிப்பிடுகையில், 'இது தொடர்பாக தொழிலாளர், கலால் மற்றும் காவல் துறையினர் விரிவான அறிக்கையை அளித்துள்ளனர். இதன்படி, அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூன் 17, 2024 10:24

சென்னை ஆவின் ஆலையில் சிறுவர்களை வேலைக்கு வைத்து சம்பளம் கூட கொடுக்காமல் விரட்டியடித்த புகார் என்னானது?


venugopal s
ஜூன் 17, 2024 06:55

பாஜக ஆளும் மாநிலமா? அப்ப சரி! வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ