உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருத்தப்பட்ட நீட் தர வரிசை பட்டியல்: வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

திருத்தப்பட்ட நீட் தர வரிசை பட்டியல்: வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி :திருத்தப்பட்ட நீட் தர வரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது . கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் வெளியிடப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது தேசிய தேர்வு முகமை.இதன் படி நீட் தரவரிசை பட்டியலில் 15 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். 15 மாணர்களில் தமிழகத்தை சேர்ந்த ரஜினிஸ் முதலிடம் பிடித்துள்ளார்.முதல் 100 இடங்களில் 10 இடங்கள் வரையில் தமிழக மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.ஜூன் 4 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை13,15,853 பேர் எழுதியிருந்தனர். முன்னதாக வெளியிடப்பட் தேர்வு முடிவில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியோர் 1.52 லட்சம் பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 89,426 ஆக இருந்தது. தற்போது திருத்தப்பட்ட தேர்வு முடிவின் படி 89,198 ஆக தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்னதாக, 67 பேர் முதலிடம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 17 பேர் மட்டுமே 720க்கு 720 பெற்றுள்ளனர்.முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள வரிசை எண் விபரம் 12,26,38,41, 42, 51,66,72,74,100 12 வது இடத்தை பெற்றுள்ள தமிழக மாணவர் ரஜினிஸ் 720 மதிப்பெண்ணும் 26 வது இடத்தை பிடித்த, சையத் ஆரிபின் யூசுப் 715 மதிப்பெண் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SRIRAMA ANU
ஜூலை 26, 2024 21:13

கடவுளின் குழந்தையும் கடவுள் குழந்தைக்கு சகோதரராக இருக்கும் உள்துறையையும் நீட் எழுத சொல்லுங்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 11:29

கடவுளின் ஒரே மகன்


sundaresan
ஜூலை 26, 2024 19:48

நீட் எதிர்ப்பாளர்கள் எங்கே போணார்கள். போன வருடம் தமிழக மாணவன் முதல் இடம்.இந்த வருடமும் தமிழக மாணவன் முதலிடத்தில்.12 பேர்கள் முதல் 100 ல்.நல்ல முன்னேற்றம்.


Vijayakumar Srinivasan
ஜூலை 28, 2024 08:17

யாரும் பதில் சொல்லமாட்டார்கள். தகுதி இல்லை சார்..


kuppusamy India
ஜூலை 26, 2024 19:37

தயவு செய்து உதவா நிதியை நீட் தேர்வு எழுத சொல்லவும்....


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை