உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூத்த குடிமக்கள் சலுகை ரத்து ரயில்வேக்கு வருவாய் ரூ.5,800 கோடி

மூத்த குடிமக்கள் சலுகை ரத்து ரயில்வேக்கு வருவாய் ரூ.5,800 கோடி

புதுடில்லி:ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு 5,800 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்கள் பிரிவில் பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் சலுகை வழங்கப்பட்டது. இந்தச் சலுகை, 2020ம் ஆண்டு மார்ச் 20ல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அதன் பின் இயல்பு நிலை திரும்பினாலும், மூத்த குடிமக்களுக்கான சலுகை மீண்டும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர், மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை ரத்து செய்ததால், ரயில்வே ஈட்டிய வருவாய் குறித்த தகவலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்டார். இது குறித்து சந்திர சேகர் கவுர் கூறியதாவது: கடந்த 2020 மார்ச் 20 முதல் இந்தாண்டு ஜனவரி 31 வரை 13 கோடி ஆண்கள், ஒன்பது கோடி பெண்கள் மற்றும் 33,700 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ரயில் கட்டணமாக 13,287 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர் என என் கேள்விக்கு ரயில்வே துறை பதில் அளித்துள்ளது.இந்தத் தொகையில் இருந்து மூத்த குடிமக்களைச் சேர்ந்த பெண்களுக்கான 50 சதவீத கட்டண சலுகை, ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான 40 சதவீத கட்டண சலுகையை கணக்கிட்டால், ரயில்வேக்கு நான்கு ஆண்டுகளில் கூடுதலாக 5,875 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை