உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிட்டனில் கலவரம் 100 பேர் கைது

பிரிட்டனில் கலவரம் 100 பேர் கைது

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப் பள்ளியில் கடந்த 29ம் தேதி நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று சிறுமியர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். இவர், பிரிட்டனுக்கு வந்த அகதி என வதந்தி பரவியது. இதையடுத்து, இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரிட்டன் அரசின் குடியேற்ற விதிகளுக்கு எதிராகவும் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கடைகள், உணவகங்கள், வீடுகள் தாக்கப்பட்டன. கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு சில பகுதிகளில் கடைகள் சூறையாடப்பட்டன. ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்பாஸ்ட் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறின. லிவர்பூல் நகரில், செங்கற்கள், பாட்டில்கள், மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை போலீசார் மீது வீசப்பட்டன. இதையடுத்து, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Venkataraman
ஆக 05, 2024 22:46

ஐரோப்பாவின் பல நாடுகளில் இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஏராளமான தீவிரவாதிகள் அகதிகளாக குடியேறியிருக்கிறார்கள். இதனால் அங்குள்ள உள்ளூர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்களுக்கும் அகதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. அகதிகள் அதிகமாக வசிக்கும் இடங்களில் உள்ளூர் மக்களை வர விடுவதில்லை. கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து விட்டது. எனவே அந்த அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


M Ramachandran
ஆக 05, 2024 21:37

அமைதி மார்கம் என்று சொல்பவர்கள் அது மற்றவர்களுக்கு என்றும் தங்களுக்கு வன்முறைய தான் தங்கள் உரிமை என்று உலகம் முழுக்க எங்கு குடியேரினாலும் அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு உட்படுவதில்லை/ மதிப்பில்லை அங்கு முழு நேர இன பெருக்கத்த செய்து வீர முழக்கங்கள் நாஜிகள் இன பெருக்கம் மூலம் பெரு வாரியாகி பூர்வ குடிமக்கள துரத்தி விடுவார்கள். சமீபத்தில் ஐரோப்பியா நாடுகள் சபை முழித்து கொண்டு சட்டம் இயற்றி விட்டார்கள் அகதியாக வருபவர்கள் வந்தேரிகள் இனி அந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு பணிய வேண்டும் புரட்சி செய்தால் எங்கிருந்து வந்தார்களோர் அங்கு துரத்தி அடிக்க படுவார்கள். தற்சமயம் அதை பார்த்து ஐக்கிய இங்கிலாந்து அரசும் புரட்சியில் ஈடு படுகிறார்கள்.


GoK
ஆக 05, 2024 14:12

இப்போதான் போதான் ஆரம்பமே இனிமேதான் இருக்கு...


magan
ஆக 05, 2024 12:55

அமைதி மார்கத்தை குடியேற்றினால் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்


ram
ஆக 05, 2024 12:15

வினை விதைத்தவன் வினைதான் அறுப்பான். காஷ்மீர் பிரச்சனையில் நமக்கு அழுத்தம் கொடுத்தார்களே இங்கு சிறுபான்மையினர் நசுக்க படுகிறார்கள் என்று. இப்போது தெரிகிறதா ஐரோப் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறதா.


Rpalnivelu
ஆக 05, 2024 08:44

இரும்புகி கரம் அல்ல மெஷின் கன் கரம் கொண்டு அடக்குங்கள். அகதிகளுக்கு ஒரு தீவை உருவாக்கி அங்கே குடியேற்றுங்கள். டிரம்ப் சொன்னது போல "சிட்டிஸின்ஷிப் ஒரு பேட் ஐடியா"


saravanan sara
ஆக 05, 2024 07:27

அமைதி மார்க்கம்னா அப்படித்தான் இருக்கும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ