உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.72 லட்சம் கையாடல்; இன்ஸ்பெக்டர் தலைமறைவு

ரூ.72 லட்சம் கையாடல்; இன்ஸ்பெக்டர் தலைமறைவு

ராம்நகர் : பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்திய வழக்கில், கைதில் இருந்து தப்பிக்க, பிடதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி உள்ளார்.ராம்நகரின் பிடதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர் நாயக். 2022ல் பெங்களூரு பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தார். ஒரு திருட்டு வழக்கில் பறிமுதல் செய்த 72 லட்சம் ரூபாயை, அரசிடம் ஒப்படைக்காமல், சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக சங்கர் நாயக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது. பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில், சங்கர் நாயக் மீது வழக்குப் பதிவானது. பின், வழக்கின் விசாரணை சி.சி.பி.,க்கு மாற்றப்பட்டது.தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சங்கர் நாயக் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரிடம் விசாரணை நடத்த தடை விதித்து இருந்தது.இந்த தடையை எதிர்த்து சி.சி.பி., மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சங்கர் நாயக்கிடம் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.இதனால், கைதில் இருந்து தப்பிக்க சங்கர் நாயக் தலைமறைவாகி விட்டார். அவரை சி.சி.பி., அதிகாரிகள் வலைவீசி தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ