உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.500 க்கு பதில் ரூ.20 ஏ.டி.எம்.,மில் அதிர்ச்சி

ரூ.500 க்கு பதில் ரூ.20 ஏ.டி.எம்.,மில் அதிர்ச்சி

ராம்நகர்: ஏ.டி.எம்., இயந்திரம் ஒன்றில் 500 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாய் வந்தது. இதனால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.ராம்நகரின் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்துக்குள், ஏ.டி.எம்., இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், பெண் ஒருவர் 5,000 ரூபாய் எடுக்க, இந்த பகுதிக்கு சென்றார். ஏ.டி.எம்., கார்டை போட்டு,தொகையை குறிப்பிட்டார்.ஆனால், எட்டு 500 ரூபாய் நோட்டுகளும், 20 ரூபாய் நோட்டுகள் இரண்டும் வந்தன. அதிர்ச்சி அடைந்த அவர், ஏ.டி.எம்., வைத்துள்ள வங்கிக்கு சென்று, விசாரித்தார். நடந்த குளறுபடிக்கு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர். மீதியுள்ள 960 ரூபாயை கொடுத்தனர்.தொழில்நுட்பக் கோளாறால் இப்படி நடந்ததாக, வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் இதை ஏற்க முடியாது. ஏனென்றால் எந்த ஏ.டி.எம்.,மிலும் 100 ரூபாய்க்கும் குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் இருக்காது. இந்த இயந்திரத்தில் 20 ரூபாய் எப்படி வந்தன. அந்த பெண் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால், அவரால் உடனடியாக வங்கிக்கு செல்ல முடிந்தது. வெளியூரை சேர்ந்தவர்களுக்கு, இப்படி நடந்தால் என்ன செய்வர் என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ