உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமாஜ்வாதி எம்.பி., தண்டனை ரத்து பதவியில் தொடர கோர்ட் உத்தரவு

சமாஜ்வாதி எம்.பி., தண்டனை ரத்து பதவியில் தொடர கோர்ட் உத்தரவு

அலாகாபாத் : கடந்த 2005ல் பா.ஜ., - எம்.எல்.ஏ., கொல்லப்பட்ட வழக்கில் எம்.பி., அப்சல் அன்சாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. உத்தர பிரதேசத்தில், 2005ல் பா.ஜ., - எம்.எல்.ஏ., கிருஷ்ணானந்த் ராய் படுகொலை செய்யப்பட்டார்.

தகுதி நீக்கம்

இது தொடர்பாக சமாஜ்வாதி எம்.பி. அப்சல் அன்சாரி மற்றும் அவரது சகோதரர் முக்தார் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.வழக்கை விசாரித்த காஜிப்பூர் சிறப்பு நீதிமன்றம், 2023ல் குண்டர் சட்ட வழக்கில் சகோதரர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் முக்தார் இறந்ததை அடுத்து, அப்சல் மட்டும் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்படுவார். இதன்படி, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் அன்சாரியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது.கடந்த 2023ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து அப்சல் விடுவிக்கப்பட்டார். வழக்கில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அப்சல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், அப்சலின் மேல்முறையீடு மனுவை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

மேல்முறையீடு

இதையடுத்து, அப்சலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.அதில், அவரின் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, அப்சல் அன்சாரி எம்.பி., பதவியில் தொடரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V RAMASWAMY
ஜூலை 30, 2024 08:58

பணம் பத்தும் செய்யும், குற்றம் செய்துவிட்டு தண்டனையிலிருந்து விடுதலையடையவும் முடியும்.


Barakat Ali
ஜூலை 30, 2024 08:46

நீதிபதிகள் எங்கள் கட்டுப்பாட்டில் ......


GMM
ஜூலை 30, 2024 08:29

சமாஜ் வாதி MP விடுவிக்கும் முன் பிஜேபி MLA வை படுகொலை செய்தது யார் என்று தெரிய வேண்டாமா? தண்டித்து, பின் விடுதலை செய்யும் போது, நீதிமன்றம் மீது மக்கள் மற்றும் போலீசார் பிடிப்பு குறையும். மேலும் பதவில் தொடர அனுமதிப்பது பற்றி முடிவு செய்ய அதிகாரம் பெற்றது இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர். நாட்டின் பரவலான அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் முழுமையாக பயன்படுத்தி வருவதை மத்திய அரசு எத்தனை ஆண்டுகள் வேடிக்கை பார்க்கும். ?


Dharmavaan
ஜூலை 30, 2024 07:45

இவன் கொலைகாரனா இல்லையா உச்சநீதி யின் நிலை என்ன


Dharmavaan
ஜூலை 30, 2024 07:41

கேவலமான நீதி அதுவும் உச்ச நீதி மன்றம் வெட்கக்கேடு


Nandakumar Naidu.
ஜூலை 30, 2024 07:40

குற்றவாளிகளை விடுதலை செய்வதே கோர்ட்டுகளுக்கு வேலை ஆகிவிட்டது. உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் இப்படி தேசவிரோத சக்திகளாக மாறிக் கொண்டிருக்கின்றது வேதனை அளிக்கிறது. நான் இந்தியாவில் இருக்கிறோமோ பாகிஸ்தானில் இருக்கிறோமா என்று புரியவில்லை.


subramanian
ஜூலை 30, 2024 06:53

உண்மை உறங்கும் நேரம் இது. நீதிபதிகள் சுயமாக சிந்தித்து செயல்பட வில்லை என்பதை இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. நீதிபதிகள் அரசியல் சாசன படி, மனசாட்சி படி தீர்ப்பு வழங்கினால்....இப்படி தீர்ப்பு சொல்ல முடியாது.


sankaranarayanan
ஜூலை 30, 2024 06:10

இப்படியே ஒவ்வொரு அப்பிலையும் உச்ச நீதி மன்றம் அவர்களை விடுவித்து பதவியை தொடர அனுமதித்தால் நாட்டில் நீதி எங்கே நிலை நாட்ட முடியும் மக்கள்தான் சிந்திக்க வேண்டும்


vadivelu
ஜூலை 30, 2024 06:59

இப்போதைக்கு எதிர் கட்சிகளில் யாருமே தவறு செய்தவர்களோ செய்பவர்களோ இல்லை. எல்லோரும் யோக்கியர்கள். ஊழல்வாதிகள் யாரும் எதிர் கட்சிகளில் இல்லை.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 30, 2024 03:41

இந்திய நீதித்துறை எங்கே சென்றுகொண்டு இருக்கிறது? குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட அரசியல் வியாதிகள் அதுவும் முக்கியமாக புள்ளி வைத்த ஊழல்வாதிகள் கூட்டணியை சேர்ந்தவர்களின் தண்டனை நிறுத்திவைக்கப்படுகின்றன. அபாயகரமான நிலையை ஏற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை